ஐதரசன்
1 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம் / From Wikipedia, the free encyclopedia
நீரகம் அல்லது ஹைட்ரஜன் என்பது H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதை நீரியம், நீர் வளி, நீரியம், ஐதரசன் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள். இத்தனிமத்தின் அணு எண் 1, அணு எடை 1.008. தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசான தனிமமாகக் கருதப்படுவது ஹைட்ரஜனாகும். பிரபஞ்சத்தில் அதிக அளவிலுள்ள ஒற்றை அணு தனிமம் ஹைட்ரஜனேயாகும். அண்டத்தில் மொத்த அணுக்கூறு நிறையில் 75% ஹைட்ரஜனாகிய ஒற்றையணு நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது [5]. சில விண்மீன்கள் பெருவாரியாக பிளாஸ்மா நிலை ஹைட்ரஜன் நிரம்பிய விண்மீன்களாகக் கருதப்படுகின்றன. 1H என்ற குறியீட்டால் குறிக்கப்படும் புரோட்டியம் என்ற ஐசோடோப்பு பெரும்பாலாகக் காணப்படும் ஹைட்ரஜனின் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) ஆகும். இதன் உட்கருவில் நொதுமி அல்லது நியூட்ரான் என்பது எதுவும் இல்லாமல் ஒரு நேர்மின்னி (புரோட்டான்) மட்டுமே இருக்கும்.
ஐதரசன் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1H | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||
நிறமற்ற வாயு அதன் பிளாஸ்மா நிலையில் ஊதா நிற ஒளிரும் | |||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | ஐதரசன், H, 1 | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 1, 1, s | ||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
1.00784 u | ||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | 1s1 1 | ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | என்றி கேவண்டிசு[1][2] (1766) | ||||||||||||||||||||||||
பெயரிட்டவர் | அந்துவான் இலவாசியே[3] (1783) | ||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||
உருகுநிலை | 13.99 K, −259.16 °C, −434.49 °F | ||||||||||||||||||||||||
கொதிநிலை | 20.271 K, −252.879 °C, −423.182 °F | ||||||||||||||||||||||||
மும்மைப் புள்ளி | 13.8033 K (-259°C), 7.041 kPa | ||||||||||||||||||||||||
மாறுநிலை | 32.938 K, 1.2858 MPa | ||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | (H2) 0.117 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | (H2) 0.904 கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (H2) 28.836 யூல்.மோல்−1·K−1 | ||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 2.20 (பாலிங் அளவையில்) | ||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 31±5 pm | ||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 120 பிமீ | ||||||||||||||||||||||||
படிக அமைப்பு | hexagonal | ||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic[4] | ||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 0.1805 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் | 1310 மீ.செ−1]] | ||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: ஐதரசன் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
·சா |
ஹைட்ரஜனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமம் ஆகும். இத்தனிமம் மாழையல்லா (உலோகமற்ற) வகையைச் சேர்ந்தது. இது ஒற்றை இயைனியப் (univalent) பண்பும், இரண்டு நீரிய அணுக்கள் இணைந்து, ஈரணு (H2) வடிவு கொள்ளும் பண்பும் கொண்ட தனிமம் ஆகும்.
நீரியம், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றிலும் எடை குறைவானதும், கூடிய அளவு கிடைக்கக்கூடியதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும் நீரியம் தனித்துக் காணப்படுகிறது. புவி வளிமண்டலத்தில் மில்லியனில் 0.5 பங்கு என்ற அளவில் செழுமை பெற்றுள்ளது. ஆர்கான், நியான்,ஈலியம், கிரிப்டான் போன்ற மந்த வளிமங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 விழுக்காடும் நீர்மண்டலத்தில் 10.82 விழுக்காடும் நீரியம் சேர்ந்துள்ளது. அண்டத்தின் 75% தனிமத் திணிவு நீரியத்தாலானது.[6] அதாவது, அண்டப் பெருவெளியில், நாள்மீன்கள் போன்ற யாவும் உள்ளடக்கிய பேரண்டத்தில் உள்ள பொருள்களில் 75% ஹைட்ரஜன் தான் இருப்பதாகக் கணித்துள்ளார்கள்.[7] இது நீர், அனைத்து உயிரகச் (organic) சேர்மங்கள், (கூண்டு மூலக்கூறுகளாகிய பக்மினிசிட்டர் புல்லரீன் (buckminsterfullerene) போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) மற்றும் அனைத்து உயிரினங்களிலும் இடம் பெற்றுள்ளது. விலங்கினங்கள், தாவரங்களில் நீர் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், ஹைட்ரஜனின் சேர்மானம் இல்லாத உயிரினமே இல்லை எனலாம். கார்பனுடன் சேர்ந்து எண்ணிலா கரிம வேதிப்பொருட்களை ஹைட்ரஜன் தந்துள்ளது.
இது வேதியியல் வினைவழி பெரும்பாலான பிற தனிமங்களுடன் வினையாற்றவல்லது. ஹைட்ரஜன் அம்மோனியா உண்டாக்காகவும், எடை குறைவானதால் காற்றில் மேலுந்தும் வளிமமாகவும், தானுந்து போன்ற ஊர்திகளுக்கு மாற்று எரிபொருளாகவும், எரிபொருள் கலன்களுக்கான வளிமமாகவும் பயன்படுகின்றது.