பப்புவா நியூ கினி அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு (Independent State of Papua New Guinea) என அழைக்கப்படும் இந்நாடு ஓசானியாவிலுள்ள (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பப்புவா மற்றும் இரியன் ஜெயா மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது.[2]

விரைவான உண்மைகள் Papua Niuginiபப்புவா நியூ கினிPapua New Guinea, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Papua Niugini
பப்புவா நியூ கினி
Papua New Guinea
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோள்: வேற்றுமையில் ஒற்றுமை
நாட்டுப்பண்: O Arise, All You Sons
[1]
Thumb
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மொரெசுபி துறை
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் டொக் பிசின்,இரி மொடு
அரசாங்கம்அரசியலைப்புச்சட்ட முடியாட்சி
 அரசர்
மூன்றாம் சார்லசு
 ஆளுனர்
பாப் தாடே
 பிரதமர்
ஜேம்ஸ் மராப்
விடுதலை 
 சுயாட்சி
டிசம்பர் 1 1973
 விடுதலை
செப்டம்பர் 16 1975
பரப்பு
 மொத்தம்
462,840 km2 (178,700 sq mi) (54வது)
 நீர் (%)
2
மக்கள் தொகை
 யூலை 2005 மதிப்பிடு
5,887,000 (104 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
 மொத்தம்
$14.363 பில்லியன் (126வது)
 தலைவிகிதம்
$2,418 (131வது)
மமேசு (2003)0.523
தாழ் · 137வது
நாணயம்கினா (PGK)
நேர வலயம்ஒ.அ.நே+10 (அவுஸ்திரேலிய கிழக்கு சீர் நேரம்)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+10 (பயன்பாட்டில் இல்லை)
அழைப்புக்குறி675
இணையக் குறி.pg
மூடு

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசராக மூன்றாம் சார்லசும், ஆளுநராக பாப் தாடேவும், பிரதம மந்திரியாக ஜேம்ஸ் மராபும் உள்ளனர்.

மக்கட்பரம்பல்

உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். மக்கள் தொகை 5 மில்லியனே உள்ள இந்நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் பரம்பியுள்ளன. இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 சதவீதமான மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத் தேவைக்கு மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

புவியியல் அமைப்பு

இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே மலைகளும் உயர்நிலங்களையும் தாழ்நிலங்களில் அடர்த்தியான மழைக்காடுகளையும் கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு விமானம்(வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி அவுஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.