![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Nepal_Patan_Mangal.jpg/640px-Nepal_Patan_Mangal.jpg&w=640&q=50)
லலித்பூர், நேபாளம்
From Wikipedia, the free encyclopedia
பதான் அல்லது லலித்பூர் (Patan; சமசுகிருதம்|पाटन}}, நகரை, அலுவல் பூர்வமாக லலித்பூர் துணை பெரு நகரம் என்பர். நேபாளத்தின் காட்மாண்டு, பொக்காராவிற்குப் பின் பாதன் மூன்றாவது பெரிய நகரமாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள நேபாள தேசியத் தலைநகரான காத்மாண்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தின் பாதன் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள பாதன் அரண்மன நகர சதுக்கத்தை யுனேஸ்கொ நிறுவனம், உலகப் பாரம்பரிய பண்பாடுக் களமாக அறிவித்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் பதான்/லலித்பூர் ललितपुर, நாடு ...
பதான்/லலித்பூர்
ललितपुर | |
---|---|
மாநகராட்சி | |
![]() பதான், தர்பார் சதுக்கம், உலகப் பாரம்பரியக் களம் | |
நாடு | நேபாளம் |
மண்டலம | பாக்மதி |
மாவட்டம் | லலித்பூர் |
Incorporated | 1918 |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.43 km2 (5.96 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,26,728 |
• அடர்த்தி | 15,000/km2 (38,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளம் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 44700 |
Area code | 01 |
இணையதளம் | www.lalitpur.org.np |
மூடு
கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் மையமாக பாடன் நகரம் உள்ளது. இந்நகர் திருவிழாக்களுக்கும், விருந்தோம்பலுக்கும், பண்டைய நுண் கலைகளுக்கும் பெயர் பெற்றது. உலோக மற்றும் கல் சிற்பக் கலைகளில் சிறந்து விளங்குகிறது.