![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Parthian_Empire_at_its_greatest_extent.png/640px-Parthian_Empire_at_its_greatest_extent.png&w=640&q=50)
பார்த்தியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
பார்த்தியப் பேரரசு (Parthian Empire) (ஆட்சிக் காலம்; கி மு – 247 - கி பி 224), என்பதை அர்சசிது பேரரசு (Arsacid Empire) என்றும் அழைப்பர். பண்டைய ஈரானின் பார்த்திய மொழி பேசும் மக்கள், ஈரானிலும், ஈராக்கிலும் அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள்.[6]
பார்த்தியப் பேரரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி மு 247–கி பி 224 | |||||||||||
![]() உச்ச கட்ட காலத்திய பார்த்தியப் பேரரசின் வரைபடம் | |||||||||||
தலைநகரம் | டெஸ்சிபான்[1] எகபடனா, சூசா, நிசா, அஸ்சக், ரேஜஸ், ஹெகாடபிலாஸ், | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய கிரேக்கம், (அலுவல் மொழி),[2]பார்த்திய மொழி, பாரசீக மொழி, அரமேயம், [2][3] அக்காடியன் மொழி | ||||||||||
சமயம் | சரத்துஸ்திர சமயம் யூத சமயம் பாபிலோனிய சமயங்கள், பல கடவுள் வழிபாட்டாளர்கள், நெருப்பு மற்றும் சூரிய வழிபாட்டாளர்கள்[4] | ||||||||||
அரசாங்கம் | நிலப்பிரபுத்துவம் முடியாட்சி[5] | ||||||||||
ஷா-இன்-ஷா (பேரரசர்) | |||||||||||
• கிமு 247 – 211 | முதலாம் அர்செஸ் (முதல்) | ||||||||||
• கிபி 208–224 | ஐந்தாம் அர்தபானாஸ் (இறுதி) | ||||||||||
சட்டமன்றம் | மெஜிஸ்தனெஸ் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | தொல் பழமைக் காலம் (Classical antiquity) | ||||||||||
• தொடக்கம் | கி மு 247 | ||||||||||
• முடிவு | கி பி 224 | ||||||||||
நாணயம் | திராச்மா | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
முதலாம் அர்செஸ் கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பாரசீகத்தின் வடகிழக்கில் உள்ள குராசான் பெருநிலப்பகுதிகளை, கிரேக்க செலுக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றி, (கிமு 171 – கிமு 138) பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார். இவருக்குப் பின் வந்த பார்த்தியாவின் ஆட்சியாளர்கள் இராக்கின் வடமேற்கு பகுதிகளான மீடியாப் பேரரசு, மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளை கிரேக்க செலுசிட் பேரரசிடமிருந்து கைப்பற்றி பார்த்தியப் பேரரசை விரிவு படுத்தினார்.
பின்னர் பண்டைய அண்மை கிழக்கின் துருக்கி முதல் ஈரான் வரை தங்கள் ஆட்சியை விரிவுப்படுத்தினர். மேற்கே மத்தியதரைக்கடலின் உரோம் பேரரசு முதல் கிழக்கே சீனாவின் ஹான் பேரரசு வரை செல்லும் பட்டுப் பாதையில் அமைந்த பார்த்திய பேரரசு வணிகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்கியது. இப்பேரரசினர் சொராட்டிரிய நெறியைப் பயின்றனர்.