சூசா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சூசா (Susa) பண்டைய அண்மை கிழக்கின் மெசபடோமியா நாகரீக காலத்திய ஈலாம் பகுதியில் அமைந்த பண்டைய பாரசீக நகரம் ஆகும்.
சூசா شوش | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சிதைந்த சூசா நகரத்தின் காட்சி | |||||||||||||
இருப்பிடம் | சூஷ், குசெஸ்தன் மாகாணம், ஈரான் | ||||||||||||
பகுதி | சக்ரோஸ் மலைகள் | ||||||||||||
ஆயத்தொலைகள் | 32°11′26″N 48°15′28″E | ||||||||||||
வகை | குடியிருப்பு | ||||||||||||
வரலாறு | |||||||||||||
கட்டப்பட்டது | கிமு 4,200 | ||||||||||||
பயனற்றுப்போனது | கிபி 1218 | ||||||||||||
பகுதிக் குறிப்புகள் | |||||||||||||
நிலை | சிதைந்த நிலையில் | ||||||||||||
|
எலமைட்டு, புது அசிரியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, சசானியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் செலூக்கியப் பேரரசு காலத்தில், கிமு 4,200 முதல் கிபி 1218 வரை சிறப்புடன் திகழ்ந்த நகரம் ஆகும்.
சூசா நகரம் அசுபானியர்களால் கிபி 647லும், இரண்டாவதாக இசுலாமியர்களால் கிபி 638லும், மூன்றாம் முறையாக மங்கோலியர்களால் கிபி 1218லும் முற்றிலும் அழிக்கப்பட்டது
டைகிரிசு ஆற்றிற்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில், கார்கேக் மற்றும் டெஸ் ஆற்றிற்கு இடையே, சக்ரோஸ் குன்றுகளின் அடிவாரத்திற்கு அடியில் தற்கால ஈரான் நாட்டின் குசெஸ்தன் மாகாணத்தில், சூஸ் நகரத்தில் அமைந்துள்ளது.
சிதைந்து போன இப்பண்டைய நகரத்தில் மூன்று பெரிய மண் குன்றுகள் மட்டும் காட்சியளிக்கிறது.[1][2]
யூதர்களின் பழைய ஏற்பாடு வேதத்தில் பல இடங்களில் சூசா நகரத்தைக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக எஸ்தர் புத்தகத்தில், சூசா நகரத்தை சூசன் எனக் குறிப்பிட்டுள்ளது.
கிமு 6ஆம் நூற்றாண்டில் யூதப் பெண் எஸ்தர், அசிரியா பேரரசரின் மனைவியாக இருக்கையில், சூசா நகரத்தின் யூதர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அறியப்படுகிறது.
1836ல் சூசா நகரத்தின் தொல்லியல் களத்தை சர் ஹென்றி ரவ்லிங்சன் மற்றும் ஆஸ்டின் ஹென்றி லயார்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.[3]
1851ல் வில்லியம் லாப்டஸ் என்பவர் இவ்விடத்தை அகழாய்வு செய்து, இதனை பண்டைய சூசா நகரம் என்பதை உறுதி செய்தார்.[4]
1885 மற்றும் 1886ல் மார்சல் அகஸ்டி என்ற பிரான்சு நாட்டு தொல்லியல் அறிஞர் சூசா நகரத்தை அகழாய்வு செய்தார்.[5]
1897 முதல் 1911 முடிய ஜாக்குஸ் மார்கன் என்பரும், 1914 வரை ரோலண்ட் என்வரும் பண்டைய சூசா நகர சிதிலங்களை அகழாய்வு செயதனர்.
பின்னர் மெகுயின்னம் எனும் பிரான்சு நாட்டவரால் 1940 வரை சூசா தொல்லியல் களம் அகழாய்வு செய்யப்பட்டது.[6][7][8] பின்னர் பண்டைய சூசா நகரத்தின் அகழாய்வின் முடிவு அறிக்கை வெளியிடப்பட்டது.[9]
பின்னர் 1970 முதல் 1975 முடிய ஜீன் பெட்ரோட் சூசா நகரத்தை அகழாய்வு செய்தார்.[10][11]
சூசா அகழாய்வில் கிடைத்த வண்ண ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களைக் கொண்டு, சூசாவின் முதல் குடியிருப்புகள் கிமு 5,000 முதல் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[12] சூசா நகர அகழாய்வில் கிடைத்த வண்ணம் தீட்டப்பட்ட பீங்கான் பாத்திரங்களைக் கொண்டு, இந்நகரம் மெசொப்பொத்தேமியா நாகரீக காலத்திய நகரம் என அறியப்படுகிறது.[13]
சுமேரியா நாகரீக காலாத்தில், சூசா நகரம் சூசானியர்களின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் ஈலமைட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்றது.[14]
கிமு 647ல் சூசா நகரத்தை புது அசிரியப பேரரசினர் கைப்பற்றினர். பின்னர் கிமு 617ல் மீடியாப் பேரரசு சூசா நகரத்தைக் கைப்பற்றினர்.
பாரசீகத்தின் அகாமனியசியப் பேரரசர் சைரசு, சூசா மற்றும் ஈலாம் நகரத்தை கைப்பற்றி, கிமு 540 முதல் கிமு 539 வரை ஆண்டார்.[15]
சைரசின் மகன் இரண்டாம் காம்பிசஸ் ஆட்சிக்குப் பின் வந்த முதலாம் டேரியஸ், சூசா மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்களை மறுசீரமைத்தார்.[16] சூசா நகரம் அகாமனியசியப் பேரரசின் குளிர்கால தலைநகரமாக விளங்கியது.[17]
வரலாற்றில் சூசா நகரம் மூன்று முறை அழிக்கப்பட்டது. முதன் முறையாக அசுபானியர்களால் கிபி 647லும், இரண்டாவதாக இசுலாமியர்களால் கிபி 638லும், மூன்றாம் முறையாக மங்கோலியர்களால் கிபி 1218லும் முற்றிலும் அழிக்கப்பட்டது.[18]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.