அக்கராயன்குளம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அக்கராயன் குளமானது இலங்கையின் உலர் வலய வடமாகாண கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப்பிரதேசசபைக்குட்ப்பட்ட KN 05 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்டது. [1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் பெயரிலே அங்கே ஒரு குளமும் உண்டு.

விரைவான உண்மைகள் அக்கராயன்குளம் Akkarayankulam, நாடு ...

[2]இது 13 ஆம் நூற்றாண்டில் வன்னியை ஆண்ட தமிழ் மன்னன் " அக்கராய மன்னனால் கட்டப்பட்டது.

Remove ads

கட்டப்பட்ட நோக்கம்

மக்களின் குடிப்பரம்பலுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும்; மேலும் இதன் எல்லைகள் விரிவாக்கம் பெற்று கோணாவில், ஸ்கந்தபுரம், யூனியன் குளம் என்று குடிப்பரம்பல் நிர்வகிக்கப்பட்டு மக்கள் வாழ்விடங்கள் விவசாய நிலங்களாக வழங்கப்பட்டு வாழ்கின்றார்கள்.

[3]இக்குளத்தின் முதல் பயனாக 1819 குடும்பங்கள் விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். முதன்மை பயிராக நெற்செய்கையே உள்ளது. மேட்டுக்காணிகளில் நிலையான பயிர்களாக தென்னை, பனை, மா, பலா, வாழை, போன்றவையும், தானிய பயிர்களாக உளுந்து, கௌப்பி, எள்ளு, குரக்கன் பயிர்களும் பயிரிடப்படுகின்றன. அக்கராயன் குளமானது மீன்பிடிக்கும் தொழிலுக்கும் உரிய இடம்.இதில் தம் விவசாய நேரம் போக மீன்பிடிப்பதையும் ஆதாரமாக கொண்டு வாழ்கிறார்கள்.

Remove ads

இக்குளத்திற்கான நீர் ஆதாரம்

[4][5]மழை நீரே அக்கராயன் ஆற்றுப்படுகை மூலம் கிடைக்கின்றது. இன்னும் மழைக்காலங்களில் வெளியேறும் மேலதிக நீர்கள் மண்டைக்கல்லாறு, கனகராயன்குள ஆற்றுப்படுகை மூலமாகவும்; மேலும் [6]முறிகண்டி குளத்திலிருந்தும் நீர் கிடைக்கின்றது.

அமைவிடம்

[7]இது A 9, A 32, நெடுஞ்சாலைகளை இணைக்கும் திருமுருகண்டியிலிருந்து A 32 வீதியில் வன்னேரிக்கும் இடையில் அமைந்துள்ளது.

விஸ்தீரணம் மற்றும் வடிவமைப்பு

அக்கராயன் குளத்தின் நீரேந்து பரப்பு 17000 ஏக்கர். இக்குளத்தில் ஆழம் 21 அடியாகும். இதன் அணைக்கட்டின் நீளம் 5600 அடி நீளமானது. இக்குளத்தின் மண் கழித்தரையாக உள்ளது.[8]

சூழல்

இக்குளத்தில் சூழல் மிக மிக இயற்கையான மரங்களால் சூழப்பட்ட காடு. இங்கு பாலை, வீரை, முதிரை ஆகிய பெருமரங்களும், சிறிய பற்றைக்காடுகளான சூரை, மஞ்சவூனா, அலம்பல் போன்றவையும், செடிகொடிகளாக மருத்துவ மூலிகைகளும் நிறைந்துள்ளன. நீலோத்பவம், செந்தாமரையும் அழகுமலர்களாக சூழவுள்ளது.

பயன்கள்

Thumb
அக்கராயன் மகா வித்தியாலயம்

இங்கு குடிப்பரம்பல் உருவாக்கப்பட்டபோது அரச மருத்துவமனை, அக்கராயன் மகா வித்யாலயம் போன்ற மக்களுக்கான தேவைகளும், சமய வழிபாடாக கிறிஸ்தவ மற்றும் இந்துக்கோயில்களும்[9] மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளத்தின் நீர்ப்பாசனம் முக்கிய காரணமாக உள்ளது.[10]

"வரப்பு உயர, நீர் உயரும்; நீர் உயர பயிர் உயரும், பயிர் உயர மக்கள் உயர்வார்கள்", என்பது போல் மக்கள் அக்கராயன் குளத்தின் மூலம் உயர்ந்தார்கள்.

Remove ads

பராமரிப்பு

Thumb
அக்கராயன் மற்றும் யூனியன் குள வீதியின் தோற்றம்

இக்குளத்தில் வெள்ளப்பெருக்கானது 1981, 1984, 1998, 2001 போன்ற காலங்களில் ஏற்பட்டுள்ளது. [11]குளமானது பராமரிக்கப்பட வேண்டியது. இது ஆற்றுப்படுகையின் மூலமாக நீரைக்கொண்டுவருவதால் குளம் தூர்ந்து போகும் நிலை உள்ளதால், தூர்வார வேண்டும். அணைக்கட்டுகள் கண்காணிக்கப்பட வேண்டும். அது உடைப்பெடுக்காமல் பராமரிக்கப்பட வேண்டும். நீர் விரயம் அகாதபடி வாய்க்கால் வடிவமைப்பு அமைப்பதன் மூலமாக இன்னும் அதிக பயன் பெற முடியும்.

மன்னன் அக்கராயன் மக்களையும் மண்ணையும் நேசித்து கட்டிய குளமே அக்கராயன் குளம்.

Remove ads

வெளி இணைப்புகள்

9°18′N 80°21′E

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads