அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அக்னி நட்சத்திரம் என்பது சன் தொலைக்காட்சியில் மே 27, 2019 முதல் ஏப்ரல் 3, 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் வர்ஷினி அர்சா, காயத்ரி ராஜ், வசந்குமார் மற்றும் ராஜ்குமார் மானோகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.[1] இந்த தொடர் ஏப்ரல் 3, 2021 முதல் 414 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

விரைவான உண்மைகள் அக்னி நட்சத்திரம், வகை ...
Remove ads

கதைச்சுருக்கம்

இந்த தொடரின் கதை இரண்டு இணைபிரியா நண்பர்கள் பற்றிய கதை. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்த்த சந்திரசேகர் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். என்னதான் நண்பரானாலும் செல்வதை ஏளனமாக பார்க்கும் சந்திரசேகரன் மனைவி நளினி.

ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் செய்துக்கறாங்க. ரெண்டு பேர் மனைவியும் ஒண்ணா கர்ப்பமாகி, ஒரே நாளில் பிரசவத்துக்கு வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அங்கு ஜெயந்தி மற்றும் செல்வத்திற்கு இரட்டை பெண்குழந்தை பிறக்கின்றது ஆனால் நளினிக்கு பிறந்த குழந்தை இறந்து பிறக்க ஜெயந்தி கண் விழிப்பதற்குள் ஒரு குழந்தையை தன் முதலாளி நண்பன் கிட்ட குடுத்துடறார் செல்வம். சந்திரசேகர் குடும்பத்தில் பணக்காரா திமிர் பிடித்த பெண்ணாக வளரும் அகிலா இங்கு ஜெயந்தி மற்றும் செல்வத்திற்கு ஒரே அன்பான பெண்ணாக வளர்கிறாள். ஆரம்பகாலம் முதல் இருவரும் எலியும் பூனையுமாக வளர்க்கின்றனர்.

20 வருடம் கழித்து ஸ்ரீதரை காதலிக்கும் அகிலா ஆனால் ஸ்ரீதர் மீராவை காதலித்து திருமணம் செய்கின்றனர். இதனால் மீரா மற்றும் ஸ்ரீதருக்கு எதிராக மாறும் அகிலா. இதற்க்கு பிறகு இவர்களின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை இக்கதை விளக்குகின்றது.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • வர்ஷினி அர்சா - மீரா ஸ்ரீதர்
  • மெர்ஷீனா நீனு (1-249) → காயத்ரி ராஜ் - அகிலா
  • வசந்குமார் - ஸ்ரீதர்
  • ராஜ்குமார் மானோகரன் - சூர்யா

துணை கதாபாத்திரம்

  • மௌனிகா[2] → கீர்த்தனா - ஜெயந்தி செல்வம்
  • ரிஷி கேசவன் - செல்வம்
  • வினோதினி → பரமோதினி → சில்பா → காயத்ரி பிரியா - நளினி சந்திரசேகர்
  • பரத் கல்யாண் - சந்திரசேகர்
  • சாந்தி ஆனந்தராஜ் - சாந்தி
  • அனுராதா - கங்காதேவி
  • ஸ்ரீ வித்யா ஷங்கர் - மைதிலி
  • முரளி - கார்த்திகேயன்
  • நவீந்தர் - நவீன்
  • மனஸ் காவாலி - ரஞ்சித்
  • பாபூஸ் - அய்யாதுரை
Remove ads

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் பிரியமானவள் என்ற தொடரின் மறு ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக மே 27, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் ஆகஸ்ட் 5, 2019 முதல் காலை 11:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 14, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் மதியம் 12 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது. பிப்ரவரி 15, 2021 முதல் ஏப்ரல் 3,2021 வரை காலை 11:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads