அனிதா ராதாகிருஷ்ணன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனித்தா ராதாகிருஷ்ணன் (Anitha Radhakrishnan) தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராக பணியாற்றியவரும். தற்போது மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் உள்ளவராவார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முக்கியப் பங்கு வகிக்கின்றார்.[1]
அனித்தா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து கிராமத்தில் 1952ஆம் ஆண்டு செப்டம்பர் 19ல் பிறந்தார்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 , 2006 ஆகிய இரு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், 2010 இடைத்தேர்தல், 2011, 2016, 2021ஆகிய நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[3][4][5]
ஆரம்பத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநில அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர். 8 ஆண்டுகள் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார்.
2009 ல் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில், சேர்ந்தார்.[6] 2016ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வென்றார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரானார்.[7]
Remove ads
குற்ற வழக்குகள்
சொத்து குவிப்பு வழக்கு
அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கு விசாரணையில், தங்களையும் ஒரு மனுதாராராக சேர்க்கக் கோரி அமலாக்க இயக்குனரகம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அமலாக்க துறையின் மனு மீது 19 ஆகஸ்டு 2023 அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவை தெரிவிக்க உள்ளார்.[8]
கொலை வழக்கு
1 மார்ச் 2011 அன்று ஆறுமுகநேரி திமுக செயலாளர் கே. எம். சுரேஷை ஒரு கும்பல் கொலை செய்ய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை குற்றவாளியாக காவல் துறை சேர்த்து, தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை கொலை முயற்சி வழக்கில் ஆதாரம் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் 18 சூலை 2023 அன்று விடுதலை செய்தது.[9]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads