அபு சிம்பெல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபு சிம்பெல் (Abu Simbel) (also Abu Simbal, Ebsambul or Isambul; அரபி: أبو سنبل, romanized: Abū Sinbal or அரபி: أبو سمبل, romanized: Abū Simbal) தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியாவின் வடக்கு எல்லையில் அமைந்த ஊர் ஆகும். இது எகிப்தின் அஸ்வான் நகரத்திற்கு தென்மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவில், நைல் நதியின் மேற்கு கரையில், நாசர் ஏரியின் மேற்குக் கரையில் உள்ளது. இது அஸ்வான் ஆளுநனரகத்தின் கீழ் உள்ளது.

இவ்வூரில் மக்கள் கிமு 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (ஆட்சிக் காலம்:கிமு 1279 முதல் கிமு 1213), எகிப்திய கடவுள்களுக்காகவும், தனக்காகவும், தன் இராணி நெபர்தரிக்கும் பல கோயில்கள் அபு சிம்பெல் ஊரில் பெரும் பாறைகளை குடைந்து எழுப்பியுள்ளார். தற்போது இது எகிப்தின் முக்கியத் தொல்லியற்களங்களில் ஒன்றாகும்.[1] இதனை அபு சிம்பெல் கோயில்கள் என்பர்.[2][3] தற்போது 2012 ஆண்டின் கணக்குப்படி, அபு சிம்பெல் ஊர் 2,600 மக்கள்தொகை கொண்டுள்ளது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads