குஷ் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

குஷ் இராச்சியம்
Remove ads

குஷ் இராச்சியம் இன்றைய சூடான் குடியரசில், நீல நைல், வெள்ளை நைல், அத்பாரா ஆறு என்பவற்றின் சங்கமப் பகுதியில் இருந்த பண்டைக்கால வடகிழக்கு ஆப்பிரிக்காவின் இராச்சியம் ஆகும். வெண்கலக் காலத்தின் வீழ்ச்சியையும், புதிய எகிப்து இராச்சியத்தின் சிதைவைத் தொடர்ந்து உருவான இந்த இராச்சியம் தொடக்கத்தில் நப்பாத்தாவை மையமாகக்கொண்டு அமைந்திருந்தது. கிமு 5-ஆம் நூற்றாண்டில் அரசர் கசுத்தா பண்டைய எகிப்தைக் கைப்பற்றிய பின், குஷ் வம்ச அரசர்கள், எகிப்தின் 25 ஆவது வம்சத்தின் பார்வோன்களாக கிமு 656 வரை ஒரு நூற்றாண்டுகள் ஆண்டனர். எகிப்தின் 26-ஆம் வம்ச மன்னர் முதலாம் சாம்திக், எகிப்தை ஆண்ட குஷ் இராச்சிய மன்னர்களை விரட்டியடித்தார்.

விரைவான உண்மைகள் குஷ் இராச்சியம்Kuluš, தலைநகரம் ...

செந்நெறிக் காலத்தில் குஷ் இராச்சியத்தின் தலைநகரமாக மேரோ இருந்தது. தொடக்ககால கிரேக்கப் புவியியலில் மேரோ சார்ந்த இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. மேரோவைத் தலைநகரமாகக் கொண்ட குஷ் இராச்சியம் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. இதன் பின்னர் உட்குழப்பங்களினால் பலமிழந்து சிதைந்துவிட்டது.

கிபி முதலாம் நூற்றாண்டளவில் குஷ் இராச்சியத்தின் தலைநகரம் பேசா வம்சத்தினரால் கைப்பற்றப்பட்டது இவர்கள் பேரரசை மீள்வித்தனர். பின்னர், குஷ் இராச்சியத் தலைநகரம் அக்சும் இராச்சியத்தினால் கைப்பற்றப்பட்டு எரித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

Remove ads

பண்டைய எகிப்தும், குஷ் இராச்சியமும்

புதிய எகிப்து இராச்சியத்தினருக்குப் பின்னர் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் முடிவில் பண்டைய எகிப்தை ஆண்ட இறுதி வம்சம் ஆகும். எகிப்தியர் அல்லாத இவ்வம்சத்தினர் மேல் எகிப்தின் (தெற்கு எகிப்து) நபதா நகரத்தை தலைநகராகக் பண்டைய எகிப்தை கிமு 744 முதல் கிமு 656 முடிய 88 ஆண்டுகள் ஆண்டனர். [2] இவ்வம்சத்தை நிறுவிய மன்னர் பியே ஆவார். இவ்வம்சத்தின் இறுதி பார்வோன் தந்தமானி ஆவார்.

புது எகிப்திய இராச்சியத்திற்குப் பின்னர் இவ்வம்சத்தினர் மட்டும் தங்களது குஷ் இராச்சியத்துடன், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை இணைத்து ஆண்டனர்.இவ்வம்சத்தினர் எகிப்திய பண்பாட்டை ஏற்றுக்கொண்டாலும், தங்களது குஷ் இராச்சியத்தின் பண்பாட்டையும் எகிப்தில் கலந்தனர்.[3] இவ்வம்சத்தினர் நூபியா எனப்படும் தற்கால சூடான் பகுதிகளில், பண்டைய எகிப்தியரைப் போன்றே தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை கட்டிக்கொண்டனர்.[4][5][6]

கிமு 656-இல் பண்டைய அண்மை கிழக்கின் புது அசிரியப் பேரரசின் பகுதிகளை கைப்பற்ற 25-வது வம்சத்தவர்கள முயன்ற போது, புது அசிரிய இராச்சியத்தின் பேரரசர் அசூர்பனிபால், இவ்வம்சத்தின் படையினரை விர்ட்டியடித்ததுடன், இவ்வம்சத்தினர் ஆண்ட குஷ் இராச்சியம், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை கைப்பற்றினார்.

எகிப்தை ஆண்ட குஷ் இராச்சியத்தின் 25-வது வம்சத்தின் பார்வோன்கள்

மேலதிகத் தகவல்கள் பார்வோன், உருவம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads