அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்

மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் சாலையில் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்map
Remove ads

அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Ampang Park MRT Station; மலாய்: Stesen MRT Ampang Park) என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கோலாலம்பூர் அம்பாங் சாலையின் புறநகர்ப் பகுதிக்குச் சேவை செய்கிறது.

விரைவான உண்மைகள் PY20 அம்பாங் பார்க், பொது தகவல்கள் ...

கோலாலம்பூர் மாநகர மையத்தை (கேஎல்சிசி) சுற்றியுள்ள மூன்று புத்ராஜெயா வழித்தட நிலையங்களில், இந்த  PY20  அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். முன்பு அம்பாங் பார்க் பேரங்காடி (Ampang Park Shopping Centre) இருந்த இடத்தில் இந்த நிலையம் தற்போது அமைந்துள்ளது.

அத்துடன் இந்த நிலையம்; மலேசியாவிற்கான அமெரிக்க தூதரகம் (US Embassy in Malaysia), சிங்கப்பூர் உயர்ப்பேராளர் ஆணையம் (Singapore High Commission in Malaysia), கனடா உயர்பேராளர் ஆணையம் மற்றும் பிரித்தானிய உயர்ப்பேராளர் ஆணையம் ஆகியவற்றுக்கு அருகிலும் உள்ளது. இந்தத் தூதரகங்கள் அனைத்தும் தூதரக வளாகம் (Embassy Row) என்று அழைக்கப்படும் துன் ரசாக் சாலை பகுதியில் அமைந்துள்ளன.[1]

Remove ads

வரலாறு

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.  PY19  ராஜா ஊடா எம்ஆர்டி நிலையத்திற்கும்;  PY21  கேஎல்சிசி எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு  PY20  ஆகும்.[2]

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் அம்பாங் பார்க் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.

அதன் பின்னர் இந்த  PY20  அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.

நிலத்தடி கட்டுமானங்கள்

Thumb
2018-ஆம் ஆண்டில் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையக் கட்டுமானம்
Thumb
2021-ஆம் ஆண்டில் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையக் கட்டுமானம்

எம்ஆர்டி நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தின் கீழ் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் நிலத்தடியில் உருவாக்கப்பட்டது. 2016 மார்ச் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 15.47 பில்லியன் மதிப்பிலான கட்டுமான கட்டமைப்புகள் எம்ஆர்டி நிறுவனத்தால் எம்எம்சி-கமுடா (MMC-Gamuda) நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும்.

13.5 கிலோமீட்டர் (8.4 மைல்) நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தில்,  PY16  செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தொடங்கி  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வரையிலான நிலையக் கட்டுமானப் பணிகளும் அடங்கும்.[3][4][5] அனைத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளன. அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[6][7]

Remove ads

ஒருங்கிணைந்த கட்டணப் பரிமாற்றம்

5 கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் 12 புத்ராஜெயா வழித்தடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த ஒரு கட்டணப் பரிமாற்றத் தளம் அமைக்கப்படுவதற்கு அம்பாங் பார்க் நிலையத்தின் நிலத்தடியில் திட்டமிடப்பட்டது; செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த ஒருங்கிணைப்பு திட்டம் கைவிடப்பட்டது.[8]

தற்போது, பயணிகள் ஒரு வழித்தடத்திலிருந்து வெளியேறி, தரை மட்டத்திற்குத் திரும்பி, இரண்டு வழித்தடங்களுக்கும் இடையில் மாறும்போது; மற்றொரு நிலத்தடி நிலையத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது; இரு நிலையங்களுக்கும் இடையில் 7 நிமிட நடைப்பயண நேரம் பிடிக்கிறது.

Remove ads

நிலைய அமைவு

G தெரு நிலை அம்பாங் சாலை, துன் ரசாக் சாலை, அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்திற்கான நடைபாதை
B1 இணைப்புவழி நுழைவாயில்கள், கடைகள், கட்டண இயந்திரங்கள், தகவல் மையம், கட்டணக் கதவுகள், நடைமேடை 1; நடைமேடை 2-க்குச் செல்லும் படிக்கட்டுகள்/நகரும் படிக்கட்டுகள்/மின்தூக்கிகள்
B2 இணைப்புவழி படிக்கட்டுகள்/நகரும் படிக்கட்டுகள் (→) நடைமேடை 1; நடைமேடை 2 (→) எல்ஆர்டி. நிலையத்திற்கான நேரடி அணுகல் (திட்டத்தில்)
B4 பிளவு நடைமேடை, தொடருந்து கதவு வலது புறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
நடைமேடை 1 12  புத்ராஜெயா  (→)  PY41  புத்ராஜெயா சென்ட்ரல்  PY21  (கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம்) (→)
B5 பிளவு மேடை, தொடருந்து கதவு இடது புறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
நடைமேடை 2 12  புத்ராஜெயா  (←)  PY01  குவாசா டாமன்சாரா  PY19  (ராஜா ஊடா எம்ஆர்டி நிலையம்) (←)

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

 புத்ராஜெயா  — அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்
A துன் ரசாக் சாலை, வாடகை உந்துகள் / சவாரி-அழைப்பு நிறுத்தம்

கேஎல் டிரில்லியன், தோக்கியோ மெரைன் கோபுரம், விசுமா யுனிரசாக்

Thumb
B கட்டணம் செலுத்தப்படாத இணைப்பு அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் (வடக்குப் பகுதி)

அம்பாங் சாலை, இன்டர்மார்க் மால், மெகான் அவெனியூ, பிளாசா ஓஎஸ்கே

Thumb

காட்சியகம்

அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads