செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sentul Barat MRT station; மலாய்: Stesen MRT Sentul Barat) என்பது மலேசியா, கோலாலம்பூர், செந்தூல், ஈப்போ சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையத்தின் அசல் பெயர் செந்தூல் வெஸ்ட் (Sentul West); பின்னர் செந்தூல் பாராட் என மாற்றப்பட்டது.
இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2022 சூன் 16 அன்று திறக்கப்பட்டது. PY15 ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையம் நிலையத்திற்கும்; PY17 தித்திவங்சா நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு PY16 ஆகும்.[1]
Remove ads
வரலாறு
இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில்; செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.
அதன் பின்னர் இந்த PY16 செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.
நிலத்தடி கட்டுமானங்கள்
நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தின் கீழ் செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தற்போது நிலத்தடியில் அமைந்துள்ளது. 2016 மார்ச் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 15.47 பில்லியன் மதிப்பிலான கட்டுமான கட்டமைப்புகள் எம்ஆர்டி நிறுவனத்தால் எம்எம்சி-கமுடா (MMC-Gamuda) நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும்.
13.5 கிலோமீட்டர் (8.4 மைல்) நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தில், செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தொடங்கி பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வரையிலான நிலையக் கட்டுமானப் பணிகளும் அடங்கும்.[2][3][4] அனைத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளன. செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[5][6]
2022 திசம்பர் 23-ஆம் தேதி, 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் திறப்பு நிகழ்வு நடைபெறும் என்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் கம்போங் பத்து நிலையம் தொடங்கி புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான மற்ற எம்ஆர்டி நிலையங்களும் செயல்படத் தொடங்கின.
இருப்பினும், அசல் திட்டத்தின்படி, செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் சூலை 2022-இல் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் திறப்பு நிகழ்வு சில தாமதங்களைச் சந்தித்தது. அதன் காரணமாக திறப்புவிழா சனவரி 2023-க்கு ஒத்திவைக்கப்பட்டது.[7][8]
நிலைய அமைவு
G | தரை தளம் | நுழைவாயில்கள் பேருந்து நிறுத்தம், வாடகை தனியார் வாகனங்கள் ![]() |
B1 | தரை தளம் | நிலையத்தின் நுழைவாயில்கள் A, B, C (→) நிலைய இணைப்புவழிகளுடன் இணைப்பு. ![]() |
B2 | நிலத்தடி தளம் | பயணச்சீட்டு இயந்திரங்கள், கட்டண வாயில்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் ![]() |
B3 நடைமேடை |
PY தெற்கு திசை | → 12 புத்ராஜெயா → PY41 புத்ராஜெயா சென்ட்ரல் PY17 (தித்திவங்சா நிலையம்) |
PY41 மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ![]() PY15 மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ![]() | ||
PY வடக்கு திசை | ← 12 புத்ராஜெயா → PY04 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் PY15 (ஈப்போ சாலை) |
இந்த நிலையம் அடுக்கு நிலைகளைக் கொண்ட நிலையமாகும். புத்ராஜெயா தொடருந்து சேவைக்காக, இந்த நிலையத்தின் மேல் பகுதியில் ஒரு மைய நடைமேடை உள்ளது. அது இரண்டு துணை நடைமேடைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- நடைமேடை 1 - புத்ராஜெயா சென்ட்ரல்
- நடைமேடை 2 - குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
Remove ads
நிலைய அமைவிடம்
செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையத்தில் கட்டண வாகன நிறுத்துமிட வசதிகள் இல்லை. இருப்பினும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளன.
இந்த நிலையத்தின் நுழைவாயில் C-இல் ஊட்டி பேருந்து சேவையும்; நுழைவாயில் B மற்றும் நுழைவாயில் C-இல் உள்ளூர் பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
பேருந்து சேவைகள்
Remove ads
காட்சியகம்
ஈப்போ சாலை எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads