அரசியல் சாசன தினம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய அரசியல் சாசன நாள் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள், 2015, நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக [1] அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.[2]
Remove ads
துவக்கம்
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர்[3] என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்பிற்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன நாள் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.[4]
வரலாறு
தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது.[5] இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 இலும், மற்றும் 1939-லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் [கிரிப்சின் தூதுக்குழு]] இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்பு 1946 மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946, சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.[6]
1947, ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா, இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.[7]
இவையையும் காண்க
Remove ads
உப தகவல்கள்
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1946 திசம்பர் 6-ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.[8]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு திசம்பர்-9-ல் நடைபெற்றது.[9]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா (தர்க்காலிகம்) செயற்பட்டார்.[10]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் (நிரந்தரம்) தலைமைவகித்தார்.[11]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.[12]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உறுவாக்கப்பட்டது.[12]
- இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார்.[13]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், ஆரம்பகால மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.[14]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக இருந்தது.[14]
- இந்திய அரசியலமைப்பு பொதுவாக இங்கிலாந்து அரசியலமைப்போடு ஒத்ததாகும்.[15]
மேற்கோள்கள்
ஊடாக இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
