அருவியூர் நகரத்தார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருவியூர் நகரத்தார் (Aruviyur Nagarathar) என்பது இந்தியாவின் சோழர் ஆட்சி காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றிய, சைவ மதத்தின் கீழ் செட்டியார் சாதிக்குட்பட்ட நகரத்தார் சமூகமாகும். இவர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் முக்கியமான வர்த்தக வைசிய சமுதாயமாக உள்ளனர்.[1][2][3] இவர்கள் அருவியூர் / அரியூர் / அரிவையூர் நகரத்தார் செட்டியார்களாகவும் அறியப்படுகின்றனர்.
மங்கைபாகர், தேனம்மை கோயில், பிரான்மலை அருவியூர் நகரத்தார் செட்டியார்களின் பிரதான கோயிலாகும். இவைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும்.[4][5].
நகரத்தார் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் சமூக சாதியாகும். நகரத்தார் சமூகமானது ஒரு ஒற்றைச் சாதி அல்ல; மாறாக, பல தொடர்புடைய முப்பது துணைச் சமூகங்களிலிருந்து வளர்ந்து, காலப்போக்கில் "நகரத்தார்" என்ற ஒரே பெயரின் கீழ் அழைக்கப்படுகிறது.
Remove ads
- அருவியூர் நகரத்தார் (வடக்கு வளவு) செட்டியார் (சைவம்) (Aruviyur Nagarathar)[6][7][8]
- அருவியூர் நகரத்தார் (தெற்கு வளவு) செட்டியார் (Aruviyur Nagarathar)
- நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்[9] (அசைவம்)
- ஏழூர் நகரத்தார் செட்டியார்
- உறுதிக்கோட்டை நகரத்தார்
- வல்லநாட்டு நகரத்தார்
- சுந்தரபட்டின நகரத்தார் செட்டியார்
- உறுதிகோட்டை வட்டகை நகரத்தார்கள்
- முரையூர் நகரத்தார்கள்[10]
- பழையப்பட்டி நகரத்தார்கள்
- ஆத்தங்குடி நகரத்தார்கள்[11]
அருவியூர் நகரத்தார்கள், கல்வி வளர்ச்சிக்காக "அருவியூர் வடக்குவளவு நகரத்தார் கல்வி வளர்ச்சி கழகம்" என்ற நல ஒழுங்கமைப்பை 16 ஜனவரி 1982 அன்று திரு. A. L. முருகன் மற்றும் திரு. ந. திருநாவுக்கரசு ஆகியோரால், தமிழ்நாட்டின் பிரான்மலையில் நிறுவினர். இக்கழகம், அருவியூர் நகரத்தார் சமூக உறுப்பினர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, குறிப்பாக வசதியில்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது.[சான்று தேவை]
Remove ads
சொற்பிறப்பியல்
நகரத்தார் என்ற சொல்லுக்கு "நகரவாசி" என்று பொருள். அவர்களின் பட்டப்பெயர் செட்டியார், என்பது பல வணிகக் குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல்லாகும், இது பண்டைய தமிழ் வார்த்தையான எட்டி என்பதிலிருந்து பெறப்பட்டது.
அருவியூர் நகரத்தார் வழிபடும் மற்றும் பராமரிக்கும் முக்கிய கோவில்கள்
- பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில், பிரான்மலை
- பிரான்மலை மங்கைபாகர், தேனம்மை கோயில், பிரான்மலை[12]
- சிறுகுடி ஸ்ரீ மலை அலங்கார சுவாமி-செம்பாயீ அம்மன் கோவில் (மலைக்கோயில்)
- மங்கைபாகர் கோவில் (எஸ் புதூர் (செம்மாம்பட்டி புதூர்))
சத்திரம், அமைப்புகள், மன்றங்கள், பத்திரிகைகள்
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் கல்வி வளர்ச்சி கழகம், பிரான்மலை, சிவகங்கை
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் சத்திரம், ராமேஸ்வரம்
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் பொதுநல சங்கம், பிரான்மலை
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் மன்றம், திருமண மண்டபம், பொன்னமராவதி
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் மன்றம், திருமண மண்டபம், சிறுகுடி
- அருவியூர் வடக்குவளவு நகரத்தார் குரல்(பத்திரிகை), பிரான்மலை. (சிவகாசிலுருந்து வெளியிடப்படுகிறது)
Remove ads
அருவியூர் நகரத்தார் குடிப்பட்டங்கள் (குடிப்பெயர்)
- அரும்பாக்கிளையார்[13]
- ஆமலூருடையார்
- ஆமனூருடையார்
- கமூகக்கூருடையார்
- கழனிவாசனூருடையார்
- சிக்கலூருடையார்
- நாவலூருடையார்
- பணப்பாக்கூருடையார்
- பூண்டிலூருடையார்
- பூதமங்கலமூருடையார்
- மேலூருடையார்
- வரதலூருடையார்
- உளுந்தூருடையார்
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள நகரத்தார் மற்றும் செட்டியார் இனக்குழுவின் பட்டியல்
- 501 செட்டியார் (701)
- அருவியூர் நகரத்தார் - அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
- ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர், வைசியச் செட்டியார்) (709)
- செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
- பேரி செட்டியார் (711)
- சோழபுரம் செட்டியார் (714)
- கொங்குச் செட்டியார் (728)
- கோட்டைப்புரச் செட்டியார் (733)
- கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
- மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
- நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
- சைவச் செட்டியார் (751)
- திருவெள்ளறைச் செட்டியார் (758)
- உலகமாபுரம் செட்டியார் (761)
- அகரம் வெள்ளாஞ்செட்டியார்[14]
- கற்பூர செட்டியார்
- காசுக்கார செட்டியார்
- பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார்
- வல்லநாட்டு செட்டியார்
- வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுலா, செக்கலார் உட்பட)
- வெள்ளாஞ்செட்டியார்
- கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
Remove ads
குறிப்புகள்
- தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல் >> முற்பட்ட சாதிகள் >> அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706) > ஒதுக்கப்பட்ட சாதி எண் 706.
- தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல் >> முற்பட்ட சாதிகள் >> நாட்டுக்கோட்டை நகரத்தார் (நாட்டுக் கோட்டை செட்டியார்) (743) > ஒதுக்கப்பட்ட சாதி எண் 743.
- செட்டிநாடும் செந்தமிழும் சோமலே (1984)-(Chettinadum Senthamizhum). சென்னை: வானதி பதிப்பகம். ப. 10 - 12.
- அருவியூர் நகரத்தார் வரலாறு பகுதி 1 (2897BC முதல் இன்றுவரை) - சூர்யா பிரிண்ட் சொலுஷன்ஸ், சிவகாசி - 2010.
- தர்ஸ்டன், எட்கர் (1909). தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர். மெட்ராஸ்: அரசு அச்சகம். பக். 257-270 தொகுதி 5.
- தர்ஸ்டன், எட்கர் (21 ஜூன் 2013). "தலைப்பு: தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்" . குட்டன்பெர்க்.
- பட்டு வேஷ்டி ராமநாதன், செட்டியார் (2015). Analytical History of Nagarathar (நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு) . சிவகாசி: சூர்யா பிரிண்ட் சொல்யூஷன்ஸ்.
- எம்ஆர் எம் கேஆர் எம், சோமசுந்தரம் (2003). நாம் நம் சேரா. காரைக்குடி: மெய்யப்பன் ஆஃப்செட் பிரிண்டர்ஸ். பக். 7–9.
- மதுரை நகரத்தார், சங்கம். History of Uruthikottai Vattagai (உறுதிக்கோட்டை வட்டகை வரலாறு) . மதுரை.
- ஸ்ரீ நிரம்ப அழகிய, தேசிக சுவாமிகள் (1994). History of Atheenam and Nagarathar (ஆதீன வரலாறும் நகரத்தார் வரலாறும்) . துலாவூர் காரைக்குடி: மீனாட்சி பிரிண்டர்ஸ். ப. 47.
- தியாகராஜன், விஎன் (1989). Uruthikottai Vattagai Nagarathar (உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு) . கோயம்புத்தூர். ப. 4.
- நகரத்தார் மலர்(Nagarathar Malar) 15 நவம்பர் 1988. பக். 19.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads