அரேகேல்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரேகேல்சு (தாவர வகைப்பாட்டியல்: Arecales) என்பது பூக்கும் தாவரங்களின் வரிசையாகும் . கடந்த சில தசாப்தங்களாக மட்டுமே இந்த வரிசை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுகளின் படி இதுவரை, இந்த தாவரங்களின் வரிசைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களையும், கோட்பாடுகளையும் காண்போம்.
Remove ads
வகைப்பாட்டியல்
2016 இன் APG IV வகைப்பாட்டியல் முறைமையின்படி, Dasypogonaceae குடும்பத்தை, அரேகேசியின் வழிதோன்றலாக காட்டும் ஆய்வுகளுக்குப் பிறகு, Dasypogonaceae குடும்பமானது, இந்த வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.[1] எனினும், இந்த முடிவு, சில அறிஞர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.[2]
பிரின்சிப்சு
தாவர வகைபிரிப்பில், கோட்பாடுகள் படி, பிரின்சிப்சு என்பது ஒரு தாவரவியல் பெயர் ஆகும். இதற்கு "முதல்" என்பது பொருளாகும். இது எங்லர் அமைப்பில் ஒருவித்திலைகளில், ஒரு வரிசைக்காகவும், பின்னர் குபிட்ஸ்கி அமைப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த வரிசையில் பால்மே (மாற்று பெயர் பனைக்குடும்பம் ) என்ற குடும்பம் மட்டுமே அடங்கியுள்ளது. தாவரவியல் பெயரிடலுக்கான விதிகள் குடும்பத்தின் தரத்திற்கு மேல் இத்தகைய விளக்கமான தாவரவியல் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு வழங்குவதால், இன்றும் இந்தப் பெயரைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான அமைப்புகள் அரேகேல்ஸ் என்ற பெயரையே விரும்புகின்றன. இதைத் தொடர்ந்து, பிரின்சிப்சு (Principes) பன்னாட்டு பாம் சொசைட்டியின் பத்திரிகையின் பெயராக மாறி பிறகு, 1999 இல் பாம்ஸ் என அழைக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
