அறைக்கீரை

From Wikipedia, the free encyclopedia

அறைக்கீரை
Remove ads

அறைக்கீரை (ஒலிப்பு; Amaranthus dubius, red spinach) அல்லது குப்பைக் கீரை அல்லது அரைக் கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் அறைக்கீரை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

பெயர்கள்

இந்த் கீரையை வேரொடு பிடுங்கி பயன்படுத்தாமல் செடியில் இருந்து இலைகளை மட்டும் கொய்து பயன்படுத்தலாம் என்பதால் இது அறுகீழை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அறுகீரை அறைக்கீரை போன்ற இதன் பெயர்கள் மக்கள் வழக்கில் மருவி அரைக்கீரை, அரக்கீர என்று வழங்கப்படுகிறது.[1]

பயன்

சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அறைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் .[2] ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது.[3] அறைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads