அஸ்வினி குமார் சௌபே

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

அஸ்வினி குமார் சௌபே
Remove ads

அஸ்வினி குமார் சௌபே (Ashwini Kumar Choubey, பிறப்பு: 02 சனவரி, 1953)[2] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் தற்போது இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார்.

விரைவான உண்மைகள் அஸ்வினி குமார் சௌபே, இணை அமைசர் & நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், புக்சர் தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் தொகுதியில் போட்டியிட்டு, பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 03 செப்டம்பர் 2017 அன்று, நரேந்திர மோடியின் முதலாவது அமைச்சரவையில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.[3][4][5]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்பு நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில், மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6]

இவர் தற்போது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads