ஆகமம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும்.[1][2] இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலான ஆகமங்கள் தமிழில் உள்ளன, எனினும் இவை பிற்காலத்தில் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன. சமண மற்றும் பௌத்த ஆகமங்கள் கூட உள்ளன.

Remove ads

ஆகமம், தமிழ்ச்சொல் தொடர்

  • ஆகமம் என்பது ஆ கமம் என்னும் இரு தமிழ்ச் சொற்களின் புணர்நிலைத் தொடர். ஆ என்பது ஆன்மா. சைவ சித்தாந்தத்தில் இது பசு எனக் கூறப்படும். கமம் என்னும் சொல் நிறைவு என்னும் பொருளைத் தரும்.[3] உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை உணர்த்தும் தமிழ்ச்சொல் தொடர் ஆகமம்.

ஆகம் + அம் = ஆகமம். ஆகம்(உடலாக) ஆக ஆகி விளங்குபவை.

ஆகமம் என்பதன் பொருள்

ஆகமம் என்பது தூய தமிழ்ச் சொல் ஆகும் (ஆகு+அம்)(ஆகு- ஆகுதல்-அப்படியே-நடத்தல், "அம்" என்பது முன் காலத்தில் அமைப்பு என்று பொருள்தரும் ஓர் ஈறு எனலாம். அமைப்பு என்பதன் அடிச்சொல் அதுவேயாகும். சிறந்த நடைமுறையை பின்பற்றும் அமைப்பு என்பதாம். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது.

ஆகமங்களின் தோற்றம்

ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை என கூறப்பட்டன.

மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகி நின்று அன்னிபான்” எனவும் “ மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்துதருளியும்” எனப்பாடுகின்றார்.

திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை “சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே” என்றும் கூறுகின்றார்.[4]

"செந்தமிழ் சிந்தை செய்து ஆகமம் செப்ப லுற்றேனே" என்று நம்பிரான் திருமூலர் பாடி அருளினார்.

மேலும் அதை தெய்வத்தமிழில் தான் அருளினேன் என்பதற்கு "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!" என்று,  வழி வழியாக வந்த ஆகமங்களை இறைவன் கூற நமக்கு அருளினார் என்று அவரே கூறுகிறார்.

"நவ ஆகமம் எங்கள்  நந்தி பெற்றானே" என்று நம்பிரான் திருமூலர் 9 ஆகமங்களை அருளினார்.

ஆகமங்களின் பிரிவுகள்

சைவ ஆகம நூல்கள் ஆகமம் என்றும், வைணவ ஆகம நூல்கள் ஸம்ஹிதை என்றும், சாக்த ஆகம நூல்கள் தந்திரம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.[5]

ஆகமங்களில் காணப்படும் கடவுட் கோட்பாடு

ஆகமம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்குகின்றது. ஆகமத்தின் கடவுட் கோட்பாட்டினை நோக்கும்போது அது உபநிடதக் கடவுட் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுகின்றது.  கடவுள் ஆன்மா இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு,வேற்றுமை என்பவற்றை உபநிடதங்கள் புலப்படுத்துகின்றன. கடவுளின் இயல்புகள் கடவுளை வழிபட்டு முத்தியடைவதற்கான வழி என்பன உரையாடல், ஆராய்ச்சி மூலமாக தெளிவு படுத்தப்படுகின்றன.[6]

சைவ ஆகமங்கள்

சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,

  1. காமிகம் - திருவடிகள்
  2. யோகஜம் - கணைக்கால்கள்
  3. சிந்தியம் - கால்விரல்கள்
  4. காரணம் - கெண்டைக்கால்கள்
  5. அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
  6. தீப்தம் - தொடைகள்
  7. சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
  8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
  9. அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
  10. சுப்ரபேதம் - தொப்புள்
  11. விஜயம் - வயிறு
  12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
  13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
  14. அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
  15. வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
  16. ரௌரவம் - செவிகள்
  17. மகுடம் - திருமுடி
  18. விமலம் - கைகள்
  19. சந்திரஞானம் - மார்பு
  20. பிம்பம் - முகம்
  21. புரோத்கீதம் - நாக்கு
  22. லளிதம் - கன்னங்கள்
  23. சித்தம் - நெற்றி
  24. சந்தானம் - குண்டலம்
  25. சர்வோக்தம் அல்லது ஸர்வோத்தம் - உபவீதம்
  26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
  27. கிரணம் - இரத்தினா பரணம்
  28. வாதுளம் - ஆடை

வைஷ்ணவ ஆகமங்கள்

  1. பாஞ்சராத்திரம்
  2. வைகானசம் என்பனவாகும்.
Remove ads

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads