ஆட்செப்சுட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆட்செப்சுட்டு (Hatshepsut) (/hætˈʃɛpsʊt/;[2] அல்லது Hatchepsut; (பொருள்:புனித மகளிருள் முன்னவர்);[3](பிறப்பு:கிமு 1507– இறப்பு: கிமு 1458) என்பவர் எகிப்தின் 18 ஆம் வம்சத்தின் இராணி ஆவார்.[4] இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் பெண்ணரசி ஆவார். இவரது கல்லறை தேர் எல் பகாரியில் உள்ளது. பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி நெஃபர்டீட்டீ ஆவார்.

பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தைச் சேர்ந்த இந்த இராணி கிமு 1507 முதல் கிமு 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.[5] பண்டைய எகிப்திய வரலாற்றில் எகிப்தை ஆண்ட முதல் அரசி நெஃபர்டீட்டீக்குப் பின்னர், அரசி அட்செப்சுத் எகிப்தை ஆண்ட இரண்டாவது அரசி எனும் பெருமை படைத்தவர். இவர் பார்வோன் முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மா ஆவார். [6]

இவரது ஆட்சியில் எகிப்தின் தெற்கில் இருந்த பண்டு இராச்சியத்தை கைப்பற்றினார்.
Remove ads
எகிப்திய பெண் அரசிகள்
பார்வோன்களின் அணிவகுப்பு
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது அரசி ஆட்செப்சுட்டுவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads