நெஃபர்டீட்டீ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஃபரடீட்டீ (Nefertiti, கி.மு 1370 - கி.மு 1330) எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் ஆயின் மகளும், பார்வோன் அகேநாதெனின் பட்டத்து அரசி (முதன்மை மனைவியும்) ஆவார்.. அதின் என்ற சூரிய சக்கரத்தை ஒரே கடவுளாக வழிபட்டமையால் இருவரும் சமய புரட்சியாளர்களாக அறியப்பட்டார்கள்.


நெஃபர்டீட்டீக்கு பல பட்டங்கள் இருந்தன:பரம்பரை இளவரசி,(iryt-p`t), புகழின் உச்சம் (wrt-hzwt), நளினத்தின் நாயகி (nbt-im3t),காதலின் இனிமை (bnrt-mrwt),இருநாடுகளின் நாயகி (nbt-t3wy),அன்புடைய முதன்மை மனைவி (hmt-niswt-‘3t meryt.f), பேரரசரின் மனைவி (hmt-niswt-wrt meryt.f), அனைத்துப் பெண்களிலும் சீமாட்டி(hnwt-hmwt-nbwt), மற்றும் கீழ், மேல் எகிப்துகளின் எசமானி (hnwt-Shm’w-mhw).[3]
பெர்லினின் நியுசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள (வலதுபுறம் காட்டப்பட்டுள்ள) அவளது மார்பளவு சிலையினால் புகழ்பெற்றாள். இச்சிலை தொன்மை எகிப்தின் மிகவும் படியெடுக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும். அவரது பட்டறையில் கண்டெடுக்கப்பட்டதால், இதனை ஆக்கியதாக துட்மோசு என்ற சிற்பி கருதப்படுகிறார். இச்சிலையின் சிறப்பு தொன்மை எகிப்தில் மனிதமுகத்தின் அளவுகள் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதே. சில அறிஞர்கள் தனது கணவனின் மறைவிற்குப் பிறகு துட்டன்காமன் பெண் உருவில் நெஃபர்னேஃபெருயேடன் (Neferneferuaten)என்ற பெயரில் பதவியேற்கும் முன்னர் நெஃபர்டீட்டீ ஆண்டதாக நம்புகின்றனர்; இருப்பினும் துட்டன்காமனின் இவ்வுருமாற்றம் மிகுந்து விவாதிக்கப்படும் ஒன்றாகும்.[4]
Remove ads
எகிப்திய பெண் அரசிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads