ஆண்ட்ரியா ஜெரெமையா

இந்தியத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia

ஆண்ட்ரியா ஜெரெமையா
Remove ads

ஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார்.[1] இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

விரைவான உண்மைகள் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.[4] இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[4] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.[5][6] இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.[7]

பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு,[3] அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[6] பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கருவாகக் கொண்டது.[8] ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9] அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.[6] 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகஸ்ட் 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.[10] பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.[11]

Remove ads

நடிகையாக

மேலதிகத் தகவல்கள் வருடம், திரைப்படம் ...
Remove ads

பின்னணிப் பாடகியாக

மேலதிகத் தகவல்கள் வருடம், பாடல் ...

பின்னணிக் குரல் கொடுப்பவராக

மேலதிகத் தகவல்கள் வருடம், திரைப்படம் ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads