ஆர்கியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்கியா (Argya) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரைன் பறவைகளின் பேரினமாகும். இந்த பேரினத்தின் சிற்றினங்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா முழுவதும் காணப்படுகின்றன. பொதுவாக இவை பெரிய குழுக்களாக நீண்ட வாலுடன் காணப்படும் பறவைகள் ஆகும். இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் முன்பு டர்டாய்ட்சு மற்றும் காருலாக்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன.
Remove ads
வகைப்பாட்டியல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி பிறப்பு ஆய்வின் முடிவாக சிற்றினங்களுக்கிடையேயான தொடர்பு[2] |
ஆர்கியா பேரினத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சிற்றினங்கள் முன்பு துர்டோயிட்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. 2018-ல் மூலக்கூறு தொகுதிபிறப்பு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, துர்டோயிட்சு பிரிக்கப்பட்டு, 1831-ல் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ரெனே லெசனால் ஏற்படுத்தப்பட்ட ஆர்கியா என்ற பேரினத்தின் கீழ் மாற்றப்பட்டன.[2][3][4] இலத்தீன் சொல்லான argutus என்பதிலிருந்து இதன் பெயர் வந்தது அர்கடசு என்பதன் பொருள் "சத்தம்" என்பதாகும்.[5] இப்பேரினத்தின் மாதிரி சிற்றினம் குறிப்பிடவில்லை. ஆனால் இது 1855ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஜார்ஜ் ராபர்ட் கிரே மூலம் அரேபியச் சிலம்பன் (ஆர்க்யா இசுகாமிசெப்சு) எனக் குறிப்பிடப்பட்டது.[6][7]
சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் 16 சிற்றினங்கள் உள்ளன. அவை:[3][8]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads