காட்டுச் சிலம்பன்

From Wikipedia, the free encyclopedia

காட்டுச் சிலம்பன்
Remove ads

காட்டுச் சிலம்பன் அல்லது காட்டு பூணியல் (jungle babbler) அல்லது பூணில் என்பது இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும் சிரிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். காட்டுச் சிலம்பன் ஆறு முதல் பத்து பறவைகள் கொண்ட சிறு கூட்டமாக உணவு தேடும் கூட்டுப் பறவைகள் ஆகும். இந்த பழக்கத்தால் வட இந்தியாவில் நகர்ப்புறங்களில் "செவன் சிஸ்டர்ஸ்" (ஏழு சகோதரரிகள்) என்றும், வங்காள மொழியிலும், பிற பிராந்திய மொழிகளிலும் "ஏழு சகோதரர்கள்" என்றும் பொருள்படும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் காட்டுச் சிலம்பன், காப்பு நிலை ...

காட்டுச் சிலம்பன் பறவை இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வசிக்கும் ஒரு பறவையாகும். இது பெரும்பாலும் பெரிய நகரங்களில் உள்ள தோட்டங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படுகிறது. கடந்த காலத்தில், இலங்கையின் ஆரஞ்சு அலகு சிலம்பன், டர்டோயிட்ஸ் ருஃபெசென்ஸ், காட்டுச் சிலம்பனின் துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போது ஒரு தனி இனமாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது.

Remove ads

வகைப்பாடு

1823 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் நிபுணரான சார்லஸ் டுமோன்ட் டி செயின்ட் குரோயிக்ஸால் வங்காளத்திலிருந்து வந்த மாதிரிகளின் அடிப்படையில் காட்டுச் சிலம்பனை விவரித்தார். அவர் Cossyphus striatus என்ற இருசொல் பெயரீட்டை உருவாக்கினார்.[2] இந்தச் சிலம்பன் முன்பு Turdoides பேரினத்தில் வைக்கப்பட்டது ஆனால் 2018 இல் ஒரு விரிவான மூலக்கூறு பைலோஜெனடிக் ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து, இது ஆர்கியா பேரனத்திற்கு மாற்றப்பட்டது.[3][4]

புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பல துணை இனங்கள் இதில் உள்ளன. அவை இறகுகளின் நிறத்திட்டுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.[5] பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட துணையினங்கள் பின்வருமாறு:

Remove ads

விளக்கம்

இது மைனா அளவுள்ள இது சுமார் 25 செ.மீ. நீளம் இருக்கும். விளை நிலங்களையும், காடுகளையும் சார்ந்து இது காணப்படும். இந்த இனம், பெரும்பாலான சிலம்பன்களைப் போலவே, வலசை போகாதது. இப்பறவை குறுகிய வட்டமான இறக்கைகள் மற்றும் பலவீனமான பறக்கும் திறனையும் கொண்டுள்ளது. பாலினங்களுக்கு இடையில் பெரிய வேறுபாடு இல்லை. தவிட்டு நிறமும், வால் சற்று நீண்டும் இருக்கும். அலகு வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி வெளிர் கருஞ்சாம்பல் நிறம் தோய்ந்த மண் பழுப்பு நிற்றத்தில் இருக்கும். தொண்டை மற்றும் மார்பகங்களில் சில திட்டுகள் இருக்கும்.

காட்டுச் சிலம்பன் ஏழு முதல் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டமாக வாழ்கின்றன. இது அவ்வளவாக சத்தமில்லாத பறவையாகும். க்இஎ, க்இஎ என கத்தியபடி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டபடி இருக்கும்.

Remove ads

வாழ்வியல்

காடுகள் நகர்ப்புறங்களில்கூடத் தென்படும் இவை, எப்போதும் ஒலி எழுப்பிக்கொண்டவாறே இருக்கும். இரையை உண்ணும்போதுகூட, ஒலி எழுப்பிக்கொண்டே உண்ணும் இப்பறவைகள் பொதுவாக சிறு பூச்சிகள், தானியங்கள், தேன் மற்றும் சிறு பழங்களை உண்டு வாழ்கின்றன.[7]. பொதுவாக 16.5 வருடங்கள் வரை கூட உயிர் வாழ்கின்றன[8]. கொண்டைக் குயில், அக்கக்கா குருவி போன்ற பறவைகள் தங்களின் முட்டைகளை, காட்டுச் சிலம்பன் பறவைகளின் கூடுகளில் இட்டுச் சென்றுவிடும். குஞ்சு பொறித்த பின்னர், தன்னுடைய குஞ்சுகள் அல்ல என்பதை உணராமல், அவற்றுக்கும் சேர்த்து பெற்றோர் பறவைகள் இரை தேடி எடுத்து வரும். ஒவ்வொரு முறையும், இரை தேடி இவை சோர்ந்து போகும் என்பதால், இதர பறவைகள் இந்தக் குஞ்சுகளுக்கு இரை கொண்டுவந்து கொடுக்கும்.[9]


மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads