திருமலையப்பன் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

திருமலையப்பன் (கதைமாந்தர்)
Remove ads

ஆழ்வார்க்கடியான் நம்பி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ பேரரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் ஆவார். மேலும் பழுவூர் இளையராணி நந்தினி தேவியை வளர்த்த சகோதரராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ஆழ்வார்க்கடியான் நம்பி, முதல் தோற்றம் ...
Remove ads

கதாப்பாத்திரத்தின் இயல்பு

திருமலை எனும் இயற்பெயர் கொண்டவர் என்றாலும் வைணவ சமயத்தினை பாடல்களால் வளர்த்த ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டு தன் பெயரை ஆழ்வார்க்கடியான் நம்பி என்று மாற்றிக் கொண்டார். உடல் முழுவதும் திருநாமம் இட்டுக் கொண்டும், கையில் எப்போதும் தடியுடன் இருப்பவர். அரசாங்க காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், நிதானமாக செயல்படும் தன்மையுடையவர். வைணவத்தின் மீதான பற்றினால் சைவர்களை காணும் பொழுதெல்லாம் சண்டையிடுகின்றவர். பொன்னியின் செல்வன் கதைமுழுவதும் சைவர்கள் நிரம்பியிருக்கும் போதும், வைணவத்தின் சார்பாக வந்து சமன்செய்கிறவர். நகைச்சுவை ததும்ப பேசுவதும், அறிவுப்பூர்வான ஆலோசனைகள் சொல்வதிலும் வல்லவர்.

Remove ads

முதல் மந்திரியின் ஒற்றன்

சோழநாட்டின் முதல் மந்திரியான அன்பில் அநிருத்தப் பிரம்மராயரின் தலைசிறந்த ஒற்றன். அநிருத்தரின் ஆணைக்கிணங்க எந்தச் செயலையும் செய்கின்றவர். தன்னுடைய வளர்ப்புச் சகோதரியான நந்தினிதேவி பழுவூர் இளையராணியாகி, சோழநாட்டினைக் கைப்பற்ற நினைக்கும் போதும், சோழர்களின் நலவிரும்பியாகவே திருமலை இருக்கிறார். குந்தவையின் வேண்டுகோளின்படி ஈழத்திற்கு சென்று அருள்மொழிவர்மனுக்கு ஓலை கொடுக்க செல்லும் வந்தியத் தேவனை அநிருத்தாின் கட்டளைப்படி ஆழ்வாா்க்கடியான் பல இடர்களிலிருந்து காத்து இளவரசரிடம் சேர்ப்பிக்கிறார். இளவரசரைத் தன்னுடன் வரும்படி வந்தியத் தேவன் அழைக்க, ஆழ்வாா்க்கடியான் முதல் மந்திரியின் யோசனைப்படி இளவரசா் ஈழத்தில் தங்குவதே நல்லது என்று தெரிவிக்கிறார். யாரோ இரவில் இளவரசரைக் கப்பலில் சிறைபடுத்திச் செல்கிறார்கள் என்று தவறாக நினைத்து, ரவிதாசனிடம் மாட்டிக் கொள்கிறான் வந்தியத்தேவன். இளவரசர் அவனைக் காப்பாற்றச் செல்கிறார்.

அநிருத்தர் ஊமைப் பெண்ணை அழைத்து வரக் கூறியமையால் இளவரசரைப் பின்தொடராமல், ஊமைப் பெண்ணைத் தஞ்சைக்கு அழைத்துச் செல்ல முயல்கிறார். பழையாறை நகருக்கு குந்தவை தேவியைச் சந்திக்க வந்த வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி பழுவேட்டரையர் ஆட்களிடம் பிடித்துக் கொடுக்க முயல்கிறான் பினாகபாணி . அதை திருமலையப்பன் முறியடித்து, வந்தியத்தேவனைக் குந்தவையிடம் அழைத்துச் செல்கிறான். இளவரசர் கடலில் சூறாவளியில் சிக்கி இறந்துவிட்டார் எனும் வதந்தி மக்களிடம் பரவி, பழையாறை மாளிகைக்கு மக்கள் வந்து சேர்கிறார்கள். அவர்களை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று குந்தவை தேவியை அங்கு அழைத்துச் செல்கிறான் திருமலை.

பழையாறை நகரில் அநிருத்தரும், குந்தவை தேவியும் இணைந்து வந்தியத்தேவனைக் காஞ்சிக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். அவனுக்குத் துணையாக திருமலையை அனுப்ப தீர்மானிக்கின்றார்கள். வந்தியத்தேவனை வழியில் சந்திக்கும் திருமலை காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலன் புறப்பட்டு விட்டதால், விரைவாகச் செல்ல வேண்டும் என்று வந்தியத்தேவனிடம் தெரிவிக்கிறார்.

Remove ads

நூல்கள்

திருமலை ஆழ்வார்க்கடியான் நம்பியை கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

வெளி இணைப்புகள்


இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads