ஆழ்வார்திருநகரி

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

ஆழ்வார்திருநகரி
Remove ads

ஆழ்வார்திருநகரி (Alwarthirunagari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இது ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

விரைவான உண்மைகள்
Thumb
ஆழ்வார் திருநகரி

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 9,289 ஆகும்[4]

10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

Remove ads

இவ்வூரின்சிறப்பு

இவ்வூர் நம்மாழ்வார் பிறந்த தலமாகும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும். ஆழ்வார்திருநகரி நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகளின் அவதாரத் தலமும் இதுதான். இங்கு மேலும் திருவேங்கடமுடையான் கோயிலும், திருவரங்கநாதன் கோவில் பிள்ளைலோகாச்சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் திருக்கோவில், உடையவர் கோவில், உய்யக்கொண்டார், பெரியநம்பி, கிருஷ்ணன், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் ஆகிய கோவில்கள் உள்ளன.

"பூதலவீரராம" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. [6]

தமிழ்த்தாத்தா உ.வே.சா.

இவ்வூரில் பத்துப்பாட்டு நூல்களைத் தேடி சுமார் முப்பது கவிராயர்கள் வீட்டு ஓலைச் சுவடிகளைப் பிரித்துப் பார்த்துத் தேடியிருக்கிறார் தமிழ்தாத்தா உ.வே.சா. இவ்வூரில் கிடைத்த ஐங்குறுநூறு ஏட்டுப்பிரதியே தாம் ஐங்குறுநூற்றைப் பதிப்பிப்பதற்கு ஆதாரமானது என்று குறிப்பிடுகின்றார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads