ஆ. தியாகராசா

From Wikipedia, the free encyclopedia

ஆ. தியாகராசா
Remove ads

ஆறுமுகம் தியாகராசா (Arumugam Thiagarajah, 17 ஏப்ரல் 1916 25 மே 1981) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.

விரைவான உண்மைகள் ஆ. தியாகராஜாA. Thiagarajahநாஉ, இலங்கை நாடாளுமன்றம் வட்டுக்கோட்டை ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தியாகராசா, ஆறுமுகம் மற்றும் அமிர்தவல்லி ஆகியோருக்கு 1916 ஏப்ரல் 17 இல்[1] மலேசியாவில் பிறந்தார். தனது எட்டு வயதில் இலங்கை வந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். பின்பு இவர் சென்னை அடையாறு கலாசேத்திராவில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றார்.[2]

1936 இல் இளங்கலைப் பட்டமும், 1938 இல் முதுகலைப் பட்டமும், 1941 இல் எம்.லிட்., பட்டமும் பெற்று இலங்கை திரும்பி காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] 1942 இல் மகேசுவரி சிவகுருநாதன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] 1946 இல் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று,[3] 1970 இல் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் இறங்கினார். 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார்.[2]

Remove ads

அரசியலில்

தியாகராசா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ. அமிர்தலிங்கத்தை 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களில் அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி அரசில் சேர்ந்து புதிய குடியரசு அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தார்.[5][6] 1972 ஆம் ஆண்டில் இவரது கொழும்பு இல்லத்தில் வைத்து இவர் மீது இடம்பெற்ற கொலை முயற்சியில் உயிர் தப்பினார்.[5]

தியாகராசா 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் தா. திருநாவுக்கரசுவிடம் 18,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[7] இவர் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். 1981 சூன் 4 இல் நடத்தப்படவிருந்த முதலாவது மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[8] ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக ஈழப்போராளிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.[9]

Remove ads

படுகொலை

1981 மே 24 இல் மூளாய் என்ற ஊரில் கட்சித் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு இரவு பத்தரை மணியளவில் தனது வாகனத்தில் வந்து அமர்ந்த போது புளொட் போராளி ஒருவரால் சுடப்பட்டார்.[3][10] இவர் பின்னர் அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[9] அடுத்த நாள் 1981 மே 25 அன்று இரவு 07:30 மணியளவில் தனது 65-ஆவது அகவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[11]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads