இடங்கணசாலை
இடங்கணசாலை பேரூராட்சி 1வார்டு மாட்டையாம்பட்டி இங்கு விவசாயம் மற்றும் நெசவு தொழில் அதிகமாக உள From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடங்கணசாலை (ஆங்கிலம்:Edaganasalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இடங்கணசாலை நகராட்சியும் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இளம்பிள்ளை பேரூராட்சியும் கைநெசவுத் தொழிலுக்கு சிறந்து விளங்குகிறது.
Remove ads
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
பேரூராட்சியாக இருந்த இடங்கணசாலை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக நிறுவுவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
அமைவிடம்
இடங்கணசாலை பேரூராட்சிக்கு கிழக்கே சேலம் 20 கி.மீ.; மேற்கே சங்ககிரி 34 கி.மீ.; வடக்கே ஓமலூர் 25 கி.மீ. மற்றும் தெற்கே இளம்பிள்ளை 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
24.5 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,631 குடும்பங்களும், 33,245 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 68.1% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 888 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]
பெயர் காரணம்
முந்தைய காலங்களில் இப்பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் இளங்கன்றுகள் இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையான ஏரியில் நீர் அருந்த வந்ததனால் இவ்வூர் இளங்கன்சாலை என்று அழைக்கப்பட்டது பின்னர் இடங்கணசாலை என்றானது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads