இந்தியச் சாம்பல் கீரி

From Wikipedia, the free encyclopedia

இந்தியச் சாம்பல் கீரி
Remove ads

இந்தியச் சாம்பல் கீரி (Indian grey mongoose) அல்லது ஆசியச் சாம்பல் கீரி (உர்வா எட்வர்ட்சி) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மேற்கு ஆசியாவில்காணப்படும் கீரி சிற்றினமாகும். இது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் இந்தியச் சாம்பல் கீரி, காப்பு நிலை ...

சாம்பல் கீரி காடுகள், புதர்கள் மற்றும் பயிரிடப்பட்ட வயல்களில் வாழ்கிறது. இவரி பெரும்பாலும் மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இது வளை, மரங்கள் நிறைந்த தோப்புகளில் புதர்களுக்கு இடையில் வாழ்கிறது. மேலும் பாறைகள் அல்லது புதர்களின் கீழ் மற்றும் வடிகால்களில் கூட தஞ்சம் அடைகிறது. இது தைரியமானது மற்றும் ஆர்வமுடையது ஆனால் எச்சரிக்கையானது, எப்போதாவது மறைவிடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் செல்கிறது. மரம் ஏறுவதில் சிறந்த உயிரியான iது பொதுவாக தனித்தனியாக அல்லது இணையாகவோ வாழ்கிறது. இதன் இரையாக கொறிணி, பாம்பு, பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகள், பல்லி மற்றும் பலவகையான முதுகெலும்பிலி உயிரினங்கள் அடங்கும். சம்பல் ஆற்றங்கரையில் இது எப்போதாவது சொம்புமூக்கு முதலையின் முட்டைகளை உண்ணும். இது ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கிறது.

Remove ads

சிறப்பியல்புகள்

இந்தியச் சாம்பல் நிற கீரி, மற்ற கீரிகளை விடப் பழுப்பு நிற சாம்பல் அல்லது இரும்பு சாம்பல் நிற உரோமங்களைக் கொண்டுள்ளது. தோலின் முரட்டுத்தன்மை வெவ்வேறு துணையினங்களில் வேறுபடுகிறது. ஆனால் இது மற்ற கீரிகளை விடச் சாம்பல் நிறத்தில் இருப்பதாக விவரிக்கப்படுகிறது. கால்கள் பழுப்பு நிறமாகவும், உடலை விடக் கருமையாகவும் இருக்கும். முகவாய் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள முடிகளும் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இவை அடர் துருச்சிவப்பு நிறத்துடன் இருக்கும். வால் புதர் போல் இருக்கும். அதே சமயம் வால் முனை, வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.[2][3][4]

இவற்றின் வால் நீளம் இவற்றின் உடல் நீளத்திற்குச் சமம். உடல் நீளம் 36 முதல் 45 செ. மீ. (14-17 அங்குலம்) வரையும் உடல் எடை 0.9 முதல் 1.7 கிலோ (2-4 lb) வரை இருக்கும். ஆண்கள் பெண்களை விடக் கணிசமாக அளவில் பெரியன. இந்தியச் சாம்பல் நிற கீரி அசாதாரணமானது. இவை மற்ற பாலூட்டிகளை விட நான்கு நிறங்களில் வேறுபடுத்துகின்றன.[5]

Remove ads

பரவலும் வாழிடமும்

இந்தியச் சாம்பல் கீரி சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஈரான், ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வாழ்கிறது.[6][7] 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் மாதிரிகள் கண்டறியப்பட்டன. இதனால் இதன் அறியப்பட்ட வரம்பு விரிவுபடுத்தப்பட்டது.[8]

பொதுவான விலங்காக இது இருந்தாலும், இந்தியச் சாம்பல் கீரியின் இயற்கை வரலாறு நன்கு அறியப்படவில்லை. இவை பல்வேறு வகையான வாழ்விடங்களை ஆக்கிரமிக்கக்கூடியதாகத் தோன்றினாலும் திறந்த வகைகளை விரும்புகின்றன. புல்வெளிகள், திறந்தவெளிப் பகுதிகள், பாறைத் திட்டுகள், புதர்க்காடுகள், பகுதிப் பாலைவனம், சாகுபடி செய்யப்பட்ட வயல்வெளிகள் மற்றும் பிற இடையூறுகள் நிறைந்த பகுதிகள், முட்புதர்கள் நிறைந்த பகுதிகள், புதர் நிறைந்த தாவரங்கள், வறண்ட இரண்டாம் நிலை காடுகள், முள் காடுகள், காடுகளின் விளிம்புகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ளன.[3][4][9] இந்த உயிரினம் மனித குடியிருப்புகளைக் குறைவாகச் சார்ந்து இருப்பதாக விவரிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக வனப்பகுதிகளில் உள்ள அவதானிப்புகள் மனித குடியிருப்புகளைச் சுற்றி அடிக்கடி கழிவுகளை உண்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.[10]

Remove ads

வகைப்பாட்டியல்

இக்னியூமன் எட்வர்ட்சி என்பது [11] 1817-ல் எட்டியென் ஜெஃப்ராய் செயிண்ட்-ஹிலேர் என்பவரால் முன்மொழியப்பட்ட அறிவியல் பெயர். இது பின்னர் கெர்பெசுடெசு பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது, ஆனால் அனைத்து ஆசியக் கீரிகளும் இப்போது உர்வா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[12]

துணையினங்கள்:

  • உ. எ. எட்வர்ட்சி
  • உ. எ. பெருஜினியா
  • உ. எ. லங்கா
  • உ. எ. மொன்டானா
  • உ. எ. நியூலா

சூழலியலும் நடத்தையும்

இந்தியச் சாம்பல் கீரி அணைத்துண்ணி வகையினைச் சார்ந்தது. இருப்பினும் இதன் உணவில் பெரும்பாலானவை நேரடி வேட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது சந்தர்ப்பவாத வேட்டையாடுபவராக எலிகள், பல்லிகள், பாம்புகள் மற்றும் வண்டுகளைப் பிடிக்கிறது. தரைப் பறவைகள், முட்டைகள், வெட்டுக்கிளிகள், தேள்கள், சென்டிபீட்ஸ், தவளைகள், நண்டுகள், மீன்கள் மற்றும் தாவரங்களின் பாகங்கள்: பழங்கள், பெர்ரி மற்றும் வேர்கள், இத்துடன் முயல்கள் மற்றும் கொக்கு உள்ளிட்ட பெரிய இரைகளையும் உண்ணுகின்றன.[13] இது கழுத்து அல்லது தலையினைக் கடித்து இரையைக் கொல்லும் வழக்கமுடையது.

Thumb
இந்திய சாம்பல் கீரி மற்றும் நாகம்

இந்த சிற்றினம் விடப் பாம்புகளை எதிர்த்துப் போராடும் திறனுக்காக அறியப்படுகிறது. இது முதன்மையாகப் பாம்பைச் சோர்வடையச் செய்வதன் மூலம் இரையாக உண்ணுகிறது.[2][13] விசக் கடிக்கு எதிரான இரண்டாம் நிலை பாதுகாப்பு என்பது கடினமான கடினமான முடியை உள்ளடக்கியது. இது போன்ற நேரங்களில் உற்சாகமாக இருக்கும், தடித்த தளர்வான தோல் மற்றும் சிறப்பு அசிடைல்கொலின் ஏற்பிகள் இதை எதிர்க்கும் அல்லது பாம்பு நச்சினை முறிக்கும்.[14] தேள்களைக் கையாளும் போது, கொட்டுவதிலிருந்து தப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, மேலும் இவை எந்த வகையிலாவது அவற்றை உண்ணுகின்றன.[15]

இந்தியச் சாம்பல் கீரி பொதுவாக முட்டைகளைப் பாதங்களுக்கு இடையில் பிடித்து சிறிய முனையில் ஒரு துளையிட்டுத் திறக்கும்.[15] சிறிய கீரி பொதுவாக முட்டைகளை இவற்றின் கால்களுக்கு இடையில் பிடித்து கடினமான தரையில் வீசுவதன் மூலம் உடைக்கின்றன.[15]

Thumb
இலக்னோ விலங்கியல் பூங்காவில் இந்திய சாம்பல் கீரியின் குட்டிகள்

இந்தியச் சாம்பல் கீரி மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் இணை சேருகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று முறை இனப்பெருக்கம் செய்யும். கர்ப்ப காலம் 60 முதல் 65 நாட்கள் வரை நீடிக்கும். பெண் இரண்டு முதல் நான்கு சந்ததிகளைப் பெற்றெடுக்கிறது.

இந்தியச் சாம்பல் கீரிகளின் ஆயுட்காலம் காடுகளில் ஏழு ஆண்டுகள் அல்லது கொல்லைப்படுத்தப்பட்ட சூழலில் 12 ஆண்டுகள் ஆகும்.[13]

Remove ads

மனிதர்களுடனான உறவு

இந்தியச் சாம்பல் கீரி பெரும்பாலும் எலிகள் மற்றும் பிற பூச்சிகள் இல்லாமல் குடியிருப்புகளை வைத்திருக்க ஒரு செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறது.[16]

இந்தியச் சாம்பல் கீரி சண்டிகர் மாநில விலங்காக உள்ளது.[17]

இந்த இனம் இந்தியாவில் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் வர்ணத் தூரிகைகள் மற்றும் சவர தூரிகைகள் தயாரிக்கும் நோக்கங்களுக்காக முடியின் சட்டவிரோத வர்த்தகம் தொடர்கிறது, மேலும் இது இதன் மிக முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.[18] 155 கிலோ கீரி உரோமம் தயார் செய்ய சுமார் 3000 கீரிகள் கொல்லப்பட்டன. 2018ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச வனத் துறை மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு துறையினால் இவைக் கைப்பற்றப்பட்டன.[19]

Remove ads

சொற்பிறப்பியல்

இந்தியச் சாம்பல் கீரி முங்கசு (muṅgūs) அல்லது மங்கசு (maṅgūs) என இந்தியிலும்[20] மங்கூசா (muṅgūsa) என மராத்தியிலும்[21] முங்கி (mungi) எனத் தெலுங்கிலும்[22] முங்கி, முங்கிசி (mungi, mungisi) மற்றும் munguli (முங்குலி) எனக் கன்னடத்திலும் அழைக்கப்படுகிறது.[23]

கலாச்சாரத்தில்

" ரிக்கி-டிக்கி-தவி " என்பது வீரம் மிக்க இளம் இந்திய சாம்பல் கீரியின் சாகசங்களைப் பற்றிய இரட்யார்ட் கிப்ளிங்கின் சிறுகதை கூறுகிறது.[24]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads