இரணியல் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரணியல் தொடருந்து நிலையம் (Eraniel railway station, நிலையக் குறியீடு:ERL) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் என்னும் ஊரில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வழியாக செல்லும் அனைத்து தினசரி இரயில்களும் இந்த தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.
Remove ads
வசதிகள்
- கணிணி மயமாக்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொடுக்குமிடம்
- ஆட்டோ நிலையம்
- காத்திருக்கும் அறைகள்
- குடிநீர் வசதி
அருகில் உள்ள இடங்கள்
- மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்
- பத்மநாபபுரம் அரண்மனை
- திருவிதாங்கோடு அரப்பள்ளி
- குமாரகோவில் முருகன் கோவில்
- முட்டம்
- திற்பரப்பு அருவி
- உதயகிரி கோட்டை
- குளச்சல் துறைமுகம்
கடந்து செல்லும் தொடருந்துகள்
பயணிகள் இரயில்கள்
- 372 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 07:15[1]
- 374 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 08:25[1]
- 364 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 12:42[1]
- 376 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 18:42[1]
- 371 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 08:16[1]
- 377 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 12:15[1]
- 375 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 18:35[1]
- 373 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்துn 19:20[1]
விரைவு இரயில்கள்
இரணியல் இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள
- நாகர்கோவில் மங்களூரு எர்நாடு விரைவு (16605/16606) தினசரி
- கன்னியாகுமரி ஜம்மு விரைவு வண்டி (16317/16318) வாரம் ஒருமுறை
- நாகர்கோவில் காந்திதாம் விரைவு வண்டி(16336/16335)வாரம் ஒருமுறை
- நாகர்கோவில் சாலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660) வாரம் ஒருமுறை
- திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரம் ஒருமுறை
- திருநெல்வேலி கப்பா அதிவிரைவு வண்டி (12997/12998) வாரம் இருமுறை
அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்
- திருவனந்தபுரம் மங்களூரு விரைவு வண்டியை 6603/6604 இரணியல் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பது.[10][11]
- வேளாங்கன்னிக்கு - கொல்லத்திலிருந்து தனிசரி இரவு இரயில் இரணியல் வழியாக விடுவது.[12]
- கன்னியாகுமரியிலிருந்து - கோவா வரை இரணியல் வழியாக தினசரி இரயில் விடுவது.[13]
- கொச்சு வேளியிலிருந்து - பெங்களூரு வரை தமிழ்நாடு வழியாக புதிய இரயில் விடுவது.[14]
எதிர்கால திட்டங்கள்
- இரண்டு நடைமேடைகள் இருப்பதை மூன்று நடைமேடைகளாக மாற்றுவது.
- தற்போதுள்ள கைகாட்டி மர இயந்திர சமிக்ஞைகளுக்குப் பதிலாக வண்ண ஒளி சமிக்ஞைகளை மாற்றுதல்.
- கணிணி மயமாக்கப்பட்ட அறிவிப்பு இயந்திரம் நிறுவுவது.
- பயணிகள் நடை மேடையைக் கட்டுவது.
கன்னியாகுமரி மாவட்ட இரயில் நிலையங்கள்
காட்சியகம்
- இரயில் நிலைய நடைமேடை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads