இரண்டாம் ஐசேத்னோபிரெட்

பண்டைய எகிப்து மன்னரின் பட்டத்தரசி From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் ஐசேத்னோபிரெட்
Remove ads

இரண்டாம் ஐசேத்னோபிரெட் ( Isetnofret II ) ( எகிப்திய மொழி : "அழகான ஐசிஸ்") பண்டைய எகிப்தின் அரச குலப் பெண் ஆவார். மேலும், பார்வோன் மெர்நெப்தாவின் பட்டத்தரசியுமாவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் ஐசேத்னோபிரெட், துணைவர் ...
Remove ads

குடும்பம்

இரண்டாம் ஐசேத்னோபிரெட் இளவரசர் கெம்வெசேத்தின் மகளாக இருக்கலாம். அப்படியானால், ஒருவேளை இவர் தனது மாமா மெர்நெப்தாவை மணந்தார். மற்றொரு சாத்தியம் என்னவென்றால், இவர் மன்னன் இரண்டாம் ராமேசசின் மகளாக இருக்கலாம். அதாவது அவரது பட்டத்தரசி ஐசேத்னோபிரெட்டின் மகள்.

இவரது குழந்தைகளில்;

  • இளவரசர் சேத்தி-மெர்நெப்தா, பின்னர் இரண்டாம் சேத்தி என்ற பெயரில் அரியணை ஏறினார். [1]
  • இளவரசர் மெர்நெப்தா, அரசனின் மகன் [2]
  • இளவரசர் கெம்வெசேத், அரசரின் மகன், கர்னாக் கோயிலில் சித்தரிக்கப்படுள்ளார். [3]
  • ஒருவேளை, இளவரசி ஐசேத்னோபிரெட் (?), லைடன் கப்பல் ஓவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசனின் மகள் [2] ஆகியோர் அடங்குவர்
Remove ads

வாழ்க்கை

இரண்டாம் ஐசேத்னோபிரெட் தனது சாத்தியமான தாத்தா இரண்டாம் ராமேசசின் ஆட்சியின் போது பிறந்து வளர்ந்தார். இவர் கெம்வெசேத்தின் மகளாக இருந்தால், இவர் மெம்பிசில் வளர்ந்திருக்கலாம். இவர் தனது கணவரின் ஆட்சியின் போது பல முறை தோன்றுகிறார். [4]

இறப்பு

இவர் எப்போது இறந்தார் என்றும் எங்கு புதைக்கப்பட்டார் என்பதும் தெரியவில்லை. இவர் கெம்வெசேத்தின் மகளாக இருந்திருந்தால், இவர் சக்காராவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம். 2009 ஆம் ஆண்டு வசேடா பல்கலைக்கழகம் நடத்திய அகழ்வாராய்ச்சியின் போது சக்காராவில் ஐசேத்னோபிரெட் என்ற பெயருடைய அரச பெண்மணியின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. [5]

இதனையும் காணக

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads