மெர்நெப்தா
எகிப்தின் 19வது வம்சத்தின் நான்காவது பார்வோன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெர்நெப்தா (Merneptah or Merenptah) (ஆட்சிக் காலம்: கிமு 1213 – கிமு 1203) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியதை கிமு 1213 முதல் கிமு 1203 வரை 10 ஆண்டுகள் ஆண்டார்.[2]இவர் இரண்டாம் ராமேசேசின் 13-வது குழந்தை ஆவார்.[3] இவரது அரியணைப் பெயர் பா-ரெ-மெரி-நெத்ஜெரு (Ba-en-re Mery-netjeru) ஆகும். பண்டைய எகிப்திய மொழியில் இதன் பொருள் எகிப்தியக் கடவுள் இராவின் ஆன்மா மற்றும் கடவுள்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் எனப்பொருளாகும். இவருக்குப் பின் எகிப்தை ஆட்சி செய்தவர் இவரது மகன் இரண்டாம் சேத்தி ஆவார்.
Remove ads
பார்வோன்களின் அணிவகுப்பு
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மெர்நெப்தாவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [4][4]

- சுண்ணாம்புக் கற்களில் செதுக்கப்பட்ட மெர்நெப்தாவின் குறுங்கல்வெட்டுகள்
- மன்னர்களின் சமவெளியில் மெர்நெப்தாவின் சுடுமண் ஈமப்பேழை
- மெர்நெப்தாவின் மம்மி
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads