இராதாட்டமி
இந்து சமயத் திருவிழா From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராதாட்டமி (Radhashtami) என்பது இந்துக் கடவுள் கிருட்டிணனின் முக்கிய மனைவியான இராதையின் பிறந்த நாளைக் கொண்டாடும் திருவிழாவாகும்.[3][4] இது இராதையின் பிறப்பிடமான பர்சானா மற்றும் முழு விரஜபூமி பிராந்தியத்திலும் எட்டாவது நாளில் (பிரகாசமான அட்டமி) (சந்திர மாதத்தின் புரட்டாசி (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது.[5][6][7] கிருஷ்ண ஜெயந்திக்கு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இராதாட்டமி வருகிறது.[8]
வைணவத்தில் இராதை, கிருட்டிணனின் நித்திய மனைவியாகக் கருதப்படுகிறார். மேலும் அவரது நிபந்தனையற்ற அன்பிற்காகவும், கிருட்டிணன் மீதான மாறாத பக்திக்காகவும் வணங்கப்படுகிறார். இத்திருவிழா, மக்களின் சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.[9]
Remove ads
வரலாறு

வியாசரின் பத்ம புராணம் (தொகுதி 5) பூமி காண்டத்தின் 7வது அத்தியாயம் இராதாட்டமி பண்டிகை தொடர்பான விரிவான தகவல்களையும் சடங்குகளையும் வழங்குகிறது. கந்த புராணத்தின் விஷ்ணு காண்டத்தில், கிருட்டிணனுக்கு 16,000 கோபியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் இராதை மிகவும் முக்கியமானவர்.[10]
இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள கோகுலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் பர்சானாவின் யது குல ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார்.[11][12][13] ஆனால் இவர் பர்சானாவில் இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது.[14] நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை.[15]
Remove ads
கொண்டாட்டம்

இராதா வல்லப சம்பிரதாயம், கௌடிய வைணவம், துவைதாத்துவைதம், புஷ்டிமார்க்கம் மற்றும் அரிதாசி சம்பிரதாயம் போன்ற பாரம்பரியங்களுடன் தொடர்புடைய பல்வேறு கோவில்களில் இராதாட்டமி கொண்டாடப்படுகிறது. பிருந்தாவனத்தின் இராதா வல்லப ஆலயம், மற்றும் சேவா குஞ்ச் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் ஒன்பது நாட்கள் நீடிக்கும். சடங்குகளில் இராதை மற்றும் கிருட்டிணனின் ஊர்வலம், உணவு மற்றும் ஆடை விநியோகம், இசை மற்றும் நடனம் ஆகியவையும் அடங்கும்.[16]

பாரம்பரியமாக, கௌடிய வைணவத்தைப் பின்பற்றுபவர்கள் (இதில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் பக்தர்களும் அடங்குவர்) மற்றும் இராதையின் பக்தர்கள் அரைநாள் நோன்பிருப்பது வழக்கம். ஆனால், ஏகாதசியைப் போலவே, சில பக்தர்கள் முழு நாளும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். சிலர் தண்ணீர் இல்லாமல் கூட விரதமிருப்பர். இந்நாளில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் கோவில்களில் இராதாதேவி சிலைக்கு'திருமுழுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.[7] [17] [18]
இராதாட்டமி விரஜபூமி பகுதியில் சம்பிரதாயமாக கொண்டாடப்படுகிறது. விழா அன்று, இராதா கிருட்டிணன் சிலைகள் பாரம்பரியமாக முழுவதுமாக மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. கூடுதலாக, இந்த நாளில் மட்டுமே பக்தர்கள் இராதையின் பாதங்களை தரிசனம் பெற அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், அவை மூடப்பட்டிருக்கும்.
இராதாட்டமி அன்று இராதையின் சிலைக்கு பஞ்சாமிர்தம் உட்பட பலவிதப் பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டு புத்தாடை அணிவிப்பர். பின்னர் நைவேத்தியம் (உணவு) வழங்கப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் இராதா கிருட்டிணனைப் புகழ்ந்து பக்தி பாடல்களைப் பாடுவார்கள். பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக விருந்து வழங்கப்படுகிறது.[19]
Remove ads
முக்கியத்துவம்

இமாச்சலப் பிரதேச அரசின் நிதியுதவியுடன் மணிமகேசன் ஏரியில் மணிமகேசன் யாத்திரை எனப்படும் ஒரு புனித யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்ரிகர்கள் வெறுங்காலுடன், சிவன் மீது பாடல்களைப் பாடி, நடனமாடி, அட்சரின் அருகிலுள்ள சாலைப் புள்ளியிலிருந்து மணிமகேசன் ஏரி வரை 14 கிலோமீட்டர்கள் (8.7) இந்த மலையேற்றத்தை மேற்கொள்கிறார்கள்.[20] கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் மணிமகேச யாத்திரை பதினைந்து நாட்களுக்குப் பிறகு இராதாட்டமி அன்று முடிவடைகிறது.[21]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads