இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி என்பவர் (பெப்ரவரி 14, 1914 - மார்ச் 21, 1998) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார்.[1] இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர்த்திகள்’ என இசை விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.[1] இவர், மதுரை மாரியப்ப சுவாமிகளின் இசை நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்துள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் பிறந்த இவர், தனது தந்தை சித்சபை சேர்வையிடம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை ஆரம்பித்தார். தொடர்ந்து பழனி முத்தையா பிள்ளையிடம் இசையினைக் கற்றார். முருகபூபதியின் மூத்த தமையன் சி. எஸ். சங்கரசிவம் பாகவதர் என்பவர், முருகபூபதி தனக்கென ஒரு பாணியினை வளர்த்துக் கொள்ள பெரிதும் துணை புரிந்தார். இடது கையினால் மிருதங்கத்தில் செய்யப்படும் வாசிப்பு நுணுக்கங்களை, அக்காலத்து தலைசிறந்த மிருதங்கக் கலைஞர்களில் ஒருவரான கும்பகோணம் அழகநம்பி பிள்ளையிடமிருந்து முருகபூபதி கற்றார்.
Remove ads
தொழில் வாழ்க்கை
இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:
- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
- சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
- முசிரி சுப்பிரமணிய ஐயர்
- தண்டபாணி தேசிகர்
- செம்பை வைத்தியநாத பாகவதர்
- செம்மங்குடி சீனிவாச ஐயர்
- ஜி. என். பாலசுப்பிரமணியம்
- மதுரை மாரியப்ப சுவாமிகள்
- மதுரை மணி ஐயர்
- எம். டி. இராமநாதன்
- இராமநாதபுரம் கிருஷ்ணன்
- டி. எம். தியாகராஜன்
- மகாராஜபுரம் சந்தானம்
- மதுரை சோமு
- மதுரை டி. என். சேஷகோபாலன்
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:[1]
- மாவேலிக்கரா சங்கரகுட்டி நாயர்
- காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி
- கும்பகோணம் பிரேம்குமார்
- பி. துருவராஜ்
- ஜி. ஹரிசங்கர்
Remove ads
விருதுகள்
- கலைமாமணி, 1963
- பத்மஸ்ரீ, 1973[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1975[3]
- தமிழ்நாடு அரசின் ‘மாநிலக் கலைஞர்’ விருது (1979)
- பாலக்காடு மணி ஐயர் விருது (1985)[4]
- இசைப்பேரறிஞர் விருது, வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads