ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்
ஈரோடு நகரில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் (Erode Junction railway station, நிலையக் குறியீடு:ED), இந்தியாவின், தமிழ்நாட்டின் முக்கிய நகரான ஈரோடு நகரில் உள்ள தொடருந்து நிலையமாகும். தமிழகத்தின் முக்கிய தொடருந்து நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், தென்னக இரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும், சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் (ISO) அங்கீகாரம் பெற்ற டீசல் எந்திர தளமும், மின்மய எந்திர தளமும் ஒருங்கே பெற்றுள்ளது. இந்தியாவின் திருநாட்டின் மூன்றாவது தூய்மையான தொடர்வண்டி சந்திப்பு என பெயர்பெற்றது.[சான்று தேவை]
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 38 கோடி 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9][10][11][12] ஒரே நேரத்தில் 800 இருசக்கர வாகனங்கள், 100, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் இன்டர்லா கற்களை கொண்டு பிரமாண்ட நிறுத்திமிடம் அமைக்கப்படுகிறது. மேலும் ரயில் நிலையத்தில் வாகனங்கள் எளிதாக வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்வதற்கான புதிய வழித்தடங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விரைந்து பிளாட்பாரங்களுக்கு செல்லும் வகையில் அகலமான புதிய நடைபாதை, நான்கு நகரும் படிக்கட்டுகள், 4 மின்தூக்கிகள் அமைக்கப்பட உள்ளது. மின்தகவல் பலகைகள் நடைமேடையில் அமைக்கப்படுகின்றது.[13]
Remove ads
ஈரோட்டிலிருந்து செல்லும் பாதைகள்
வரலாறு
இந்நிலையமானது 1947ம் ஆண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மின்மயம் மற்றும் அகலப்பாதையுடன் இணைவு பெற்றது. தமிழகத்தின் முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், முக்கிய மாநகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய முக்கிய மாநகரங்களுடன் இணைந்துள்ளது.
வசதிகள்
இந்நிலையத்தில், பயணியர்களுக்காக 4 நடைமேடை உள்ளது. நெடுந்தூர தொடர்வண்டிகளுக்காக தண்ணீர் நிரப்பவும், உணவு பரிமாறவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம், புத்தகக் கடைகள், உணவகங்கள், உறைவிடங்கள், ஏடிஎம், போதுமான கழிவறைகள் மற்றும் குட் தண்ணீர் வசதிகளும் உள்ளன. தொடுதிரை தகவல் சேகரிப்பு மையம், தொடர்வண்டி கால அட்டவணை, நிலையத்தை கடந்து செல்லும் தொடர்வண்டிகளின் விபரம் தாங்கிய மின்னணு பலகைகளும் உள்ளது. பயணிகளின் வசதிக்காக ஒரு முன்பதிவு மையமும் செயல்பட்டு வருகின்றது.
Remove ads
உந்துப்பொறிகளின் உறைவிடம்
இந்தியாவில், டீசல் மற்றும் மின்மய உந்துப்பொறிகளின் உறைவிடங்கள் மிகச் சிலவே. அவைகளுள் ஈரோடு சந்திப்பும் ஒன்றாகும். இங்கு மொத்தம், 338 மின்மய மற்றும் டீசல் உந்துப்பொறிகள் உள்ளன.[14] இதுவே இந்திய இரயில்வே துறையின் மிகப்பெரிய உந்துப்பொறிகளின் உறைவிடமாகும். ISO தரச்சான்றிதழ் பெற்ற இங்கு 108 WAP-4 வகை உந்துகளும், மின்மய தொடருந்தின் புது வகையான WAG-7ம் உள்ளது. 1962 முதல், WDM-2 WDM-3A வகை டீசல் தொடருந்துகளும் கையாளப்படுகின்றது. மேலும், இந்நிலையத்தை கடந்து செல்லும் நெடுந்தொலைவு தொடருந்துகளுக்கும் இங்கு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
Remove ads
ஈரோட்டிலிருந்து புறப்படும் தொடர் வண்டிகள்[15]
Remove ads
ஈரோட்டை கடந்து செல்லும் தொடர் வண்டிகள்
தினமும் நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் ஈரோட்டை கடந்து செல்கின்றன.[16]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads