ஈரோடு மஞ்சள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈரோடு மஞ்சள் (Erode Turmeric) என்பது ஒரு வகை மஞ்சள். இது இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு பகுதியில் விளையும் மசாலாப் பொருள் வகையாகும்.

விரைவான உண்மைகள் ஈரோடு மஞ்சள், குறிப்பு ...

குர்க்குமின் உள்ளடக்கம்

ஈரோடு மஞ்சளில் அதிக குர்க்குமின் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பினால்அங்கீகரிக்கப்பட்ட இயற்கையான உணவு வண்ணப் பொருளாகும். ஈரோடு மஞ்சளில் 90 சதவீதம் குர்க்குமின் உள்ளது.[1] இது அதிக மருத்துவ குணம் மற்றும் சுவைக்குப் பெயர் பெற்றது.

வகைகள்

மஞ்சளின் இரண்டு முக்கிய இரகங்களான சின்ன நாடன் (உள்ளூர் சிறிய ரகம்) மற்றும் பெரும் நாடன் (உள்ளூர் பெரிய ரகம்) உள்ளன. ஈரோட்டில் சின்ன நாடன் அதிகம் விளைகிறது. சிவகிரி, கொடுமுடி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், சென்னம்பட்டி போன்ற பகுதிகளில் இது முக்கியமாக விளைகிறது.[2] மேலும், ஈரோடு பகுதியில் விரல் வகை (விராலி மஞ்சள்) மற்றும் கிழங்கு ரகம் (கிழங்கு மஞ்சள்) ஆகிய மஞ்சள் ரகங்களும் உற்பத்தியாகிறது.

Remove ads

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்

மஞ்சள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஈரோடு மஞ்சளின் மிகப்பெரிய சந்தையாகவும் ஈரோடு உள்ளது. தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கரில் ஈரோட்டில் மட்டும் மஞ்சள் சாகுபடி இருந்தது. ஆனால், தற்போது ஈரோட்டில் மட்டும் 15,000 ஏக்கராக உள்ள நிலையில், மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி 50,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது. 2021 சனவரி மாதத்தில் ஈரோட்டிலிருந்து வங்காளதேசம் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சுமார் 18,000 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் ஈரோடு மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது.[3]

ஈரோட்டில் நான்கு வெவ்வேறு இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்படுகின்றன [4]

  • ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தால் செம்மாம்பாளையத்தில் நடத்தப்படும் மஞ்சள் சந்தை வளாகம். ஈரோடு ஒழுங்குமுறை சந்தை மூலம் ஏலம் விடப்பட்டது.
  • பெருந்துறையில் ஈரோடு மஞ்சள் சந்தை வளாகம். ஈரோடு ஒழுங்குமுறை சந்தைக் குழுவால் நடத்தப்படுகிறது
  • ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் நடத்தப்படும் மஞ்சள் சந்தை வளாகம் கருங்கல்பாளையத்தில் உள்ளது.
  • ஈரோடு மணிக்கூண்டு அருகே மஞ்சள் சந்தை கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் நடத்தப்படுகிறது.

புவிசார் குறியீடு

ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம் தமிழக அரசின் மூலம் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தது. எட்டு ஆண்டு செயல்முறைக்குப் பிறகு, இந்திய அரசு 2019 ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads