உதயா (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதயா ஒரு இந்திய திரைப்பட நடிகர். அவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குநர் ஏ.எல் விஜய்யின் சகோதரரும் ஆவார்.[1]
தொழில்
இயக்குநர் பாரதி கண்ணனின் திருநெல்வேலி திரைப்படத்தில் உதயா அறிமுகமானார். பிரபு மற்றும் கரண் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். திருநெல்வேலி திரைப்படத்தில் விந்தியாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று மக்களின் கவனத்தை பெறவில்லை. உதயாவின் நடிப்பு "சராசரி" என்று விவரிக்கப்பட்டது.[2] அவர் அடுத்ததாக கலகலப்பில் விஜயலட்சுமிக்கு ஜோடியாக நடித்தார், அதில் நெப்போலியன் மற்றும் ஜெயா சீலா ஆகியோரும் நடித்திருந்தனர்.[3]
பூங்குழலி, சகலகலா பேபி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[4] 2004 ஆம் ஆண்டில், நடிகர் அசாமி என்ற திரைப்படத்தினை அறிவித்தார். ஆனால் படமாக உருவாகவில்லை.[5]
உதயா ஆகஸ்ட் 2007 இல் கீர்த்திகாவை மணந்தார்.[6] காதல் சாதி, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் நடித்தார். விண்ணத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் பெயர் உன்னைக் கண் தேடுதை என 2009 இல் வெளியிட்டனர்.[7]
உதயா நடித்த 2011 இல் ரா ரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் செல்லவில்லை. நடிகை செரீனுடன் நடித்த பூவா தலையா திரைப்படம் சுமாரான வரவேற்பு பெற்றது. தலைவா திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
Remove ads
திரைப்பட வரலாறு
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads