விஜயலட்சுமி (கன்னட நடிகை)
கன்னடத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜயலட்சுமி (Vijayalakshmi) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக கன்னட மொழிகளில் நடித்துள்ளார். சில தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2][3] பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1]
Remove ads
தொழில் வாழ்க்கை
விஜயலட்சுமி சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். கருநாடகத்தில் தன்னுடைய படிப்பை மேற்கொண்டார். இவர் சுமார் 40 திரைப்படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். சுமார் 25 கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாகமண்டலா எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார். இந்தத் திரைப்படத்தை த. சீ. நாகாபரணா என்பவர் இயக்கினார். இது ஒரு நாட்டார் கதை பற்றிய திரைப்படமாகும். இதில் பிரகாஷ் ராஜூடன் இணைந்து நடித்தார். மேலும் பிரண்ட்ஸ், மற்றும் சூரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்தார். இது 2010 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார ரீதியில் வெற்றி பெற்றது.[4] அனுமான் எனும் தெலுங்குப் படத்தில் நடித்தார். மேலும் தேவதூதன் எனும் மலையாளத் திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார்.
Remove ads
தொலைக்காட்சி
திரைப்படங்கள் மட்டுமல்லாது சில தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார். ராடான் நிறுவனம் தயாரித்த தெலுங்கு தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியான பாங்கரடா பேடேவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் கல்வி பயின்றார். 2006 ஆம் ஆண்டில் அதிக அளவு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.[5]. நவம்பர் 2016 இல் நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவருடன் திருமண உறுதி செய்யப் போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். மூன்று வருட உறவுநிலைக்குப் பிறகு மார்ச், 2017 இல் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்.[6][7] பின் சில காரணங்களால் திருமண உறுதி நடைபெறவில்லை.
தமிழ்த் திரைப்படங்கள்
1998
இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த "பூந்தோட்டம்" எனும் திரைப்படம் ஆகும். இதில் முரளி, தேவயானி ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தனர். ரகுவரன், மணிவண்ணன் ஆகியோருடன் விஜயலட்சுமி துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படம் சூலை, 1998 இல் வெளியானது.[8]
2001
2001 ஆம் ஆண்டில் சித்திக் இயக்கத்தில் அப்பச்சன் தயாரித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இதில் விஜய், சூர்யா, மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். வடிவேல், ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இதில் சந்துருவைக் (சூர்யா) காதலிக்கும் அரவிந்தனின் (விஜய்) தங்கையாக நடித்திருப்பார். இளையராஜா இசையமைத்த இந்தத் திரைப்படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது.[9]
இதே ஆண்டில் கலகலப்பு எனும் குடும்பத் திரைப்படத்தில் நடித்தார். இதனை விஸ்வா என்பவர் இயக்கினார். ஏ. எல். அழகப்பன் தயாரித்தார். நெப்போலியன் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். உதயா, ஜெய ஷீலாவுடன் விஜயலட்சுமி துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தேவா (இசையமைப்பாளர்) பாடல் மற்று பின்னணி இசையமைத்தார். இந்தத் திரைப்படம் சூலை 27, 2001 இல் வெளியானது.[10][11][12]
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads