விந்தியா
நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
விந்தியா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். அவர் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.[1] சங்கமம் (1999) படத்தில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.[2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு மற்றும் திரையுலகப் பங்களிப்பு
விந்தியா ஆகஸ்ட் 12, 1980 இல் பிறந்தார். ரகுமான் உடன் இணைந்து சங்கமம் (1999) மூலம் சினிமாவில் அறிமுகமானார், அந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வயசு பசங்க அவரது வெற்றிப்படங்களில் ஒன்று. அவரது திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் குறைந்த பட்ஜெட் படங்களில் தோன்றினார்.[3] இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை பெப்ரவரி 16, 2008 இல் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்தும் செய்து கொண்டார்.[4]
Remove ads
அரசியல் வாழ்க்கை
2006 ஏப்ரலில், அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் விந்தியா அதிமுகவில் இணைந்தார். 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார்.[5] அதை தொடர்ந்து விந்தியா அதிமுக நட்சத்திர பேச்சாளராக 2011, 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2014 மக்களவை பொதுத் தேர்தல்களில் திமுக கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.[6] மற்றும் அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.[7] அவர் முன்னாள் தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஆவார்.
விந்தியா 2012 முதல் 2016 வரை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஆண்டுதோறும் தனது கோடைகால வருகையின் போது தனது சந்திரகிரி தோட்டத்தில் இருந்து கூடை நிறைய மாம்பழங்களை கொண்டுவந்து ஜெயலலிதாவுக்கு பரிசளிப்பார்.[8] ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அவர் தொடர்ந்து மாம்பழக் கூடைகளை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து, மெரினா கடற்கரை உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விந்தியா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 20 பிப்ரவரி 2018 அன்று, விந்தியா அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார்.[9][10] 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அவர் அதிமுக கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக மீண்டும் வந்தார்.[11] 2020 ஜூலையில், அவர் அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.[12][13][14] 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். 27 செப்டம்பர் 2023 அன்று, அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]
Remove ads
நடித்த திரைப்படங்கள்
தமிழ்
- சங்கமம் - 1999 அபிராமி
- மகளிர்க்காக - 2000
- திருநெல்வேலி - 2000
- உயிரிலே கலந்தது - 2000
- கண்ணுக்கு கண்ணாக - 2000
- என் புருஷன் குழந்தை மாதிரி - 2001
- விஸ்வநாதன் ராமமூர்த்தி - 2001
- சார்லி சாப்ளின் - 2002
- நம்ப வீட்டுக் கல்யாணம் - 2002
- ரெட் - 2002
- ஆசை ஆசையாய் - 2003
- எஸ் மேடம் - 2003
- வயசு பசங்க - 2004
- சேட்டை - 2004 சுந்தரி
- கண்ணம்மா - 2005
- அழகு நிலையம் - 2008
- ஆயுதம் செய்வோம் - 2008
- வட்டப்பாறை - 2012
- உதய நேரம் - 2013 (தாமதமானது)
தெலுங்கு
- சிம்ஹாராசி - 2001
- சீதையா - 2003
மலையாளம்
- துபாய் - 2001
- ராவணபிரபு - 2001
- கிளிச்சுண்டன் மாம்பழம் - 2003
- இஸ்ரா - 2005
கன்னடம்
- லவ் ஸ்டோரி - 2005
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads