உத்தராகண்டம் மாவட்டங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்தராகண்டம் (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड, முன்னாளில் உத்தராஞ்சல் (Uttaranchal)), இந்தியாவின் வடபகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேராதூன் இம்மாநிலத்தின் தலைநகராகும். உத்தராகண்டம் மாநிலத்தில் 13 மாவட்டங்கள் உள்ளன.

Remove ads
மாவட்டங்கள்
உத்தராகண்டம் மாநிலத்தின் 13 மாவட்டங்கள்:
- சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும்,
- அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads