உருசிய தூரகிழக்கு நடுவண் மாவட்டம்
உருசிய நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads

தூர கிழக்கு நடுவண் மாவட்டம் (Far Eastern Federal District,உருசியம்: Дальневосто́чный федера́льный о́круг, Dalnevostochny federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் மிகப் பெரியது ஆகும். என்றாலும் குறைந்த மக்கள் தொகை கொண்டது. 2010 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8,371,257 (75.5% நகர்ப்புறம் [3] ) ஆகும். முழு நடுவண் மாவட்டமும் உருசியாவின் தூரக் கிழக்கில், ஆசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
தூர கிழக்கு நடுவண் மாவட்டமானது 18, மே, 2000 அன்று சனாதிபதி விளாடிமிர் புடினால் நிறுவப்பட்டது. தற்போதய சனாதிபதி தூதராக யூரி ட்ரூட்னெவ் உள்ளார். 2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி பிரதேசம் ஆகியவை நடுவண் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.[4] தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் நிர்வாக மையமானது கபரோவ்ஸ்கிலிருந்து விளாதிவசுத்தோக்கிற்கு 2018 திசம்பரில் மாற்றப்பட்டது.[5]
மக்கள்வகைப்பாடு
கூட்டாட்சி அமைப்புகள்
மிகப்பெரிய நகரங்கள் (75,000 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை)
தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தில் 82 நகரங்கள் உள்ளன. இவற்றில் 14 நகரங்களில் 75,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
- விளாதிவசுத்தோக் : 592,034
- கபரோவ்ஸ்க் : 577,441
- உலன்- உதே: 404,426
- சிட்டா : 324,444
- யாகுட்ஸ்க் : 269,601
- கொம்சோமோல்ஸ்க் -ஆன்-அமூர் : 263,906
- பிளாகோவ்ஷென்ஸ்க் : 214,309
- யுஷ்னோ -சகலின்ஸ்க் : 181,728
- பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- காம்சட்ஸ்கி: 179,780
- Ussuriysk : 158.004
- நக்கோட்காவிற்கு : 148.826
- Artyom : 102.603
- மகதான் : 95.982
- Birobidzhan : 75.413
Remove ads
தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் சனாதிபதி தூதர்கள்
- கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கி (18 மே 2000 - 14 நவம்பர் 2005)
- கமில் இஷாகோவ் (14 நவம்பர் 2005 - 2 அக்டோபர் 2007)
- ஓலேக் சஃபோனோவ் (30 நவம்பர் 2007 - 30 ஏப்ரல் 2009)
- விக்டர் இஷாயேவ் (30 ஏப்ரல் 2009 - 30 ஆகஸ்ட் 2013)
- யூரி பி. ட்ரூட்னெவ் (31 ஆகஸ்ட் 2013 - தற்போது வரை)
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads