உலக சதுரங்க வாகை 2024
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024), அதிகாரபூர்வமாக கூகுள் முன்வைக்கும் உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024 presented by Google),[1][2] என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடப்பு உலக சதுரங்க வாகையாளர் திங் லிரேனுக்கும், அறைகூவல் வீரர் குகேசிற்கும் இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் சிங்கப்பூரில் 2024 நவம்பர் 25 முதல் திசம்பர் 13 வரை இடம்பெற்றது. 14 ஆட்டங்களில், தேவைப்படின் சமன்முறிகளுடன், வாகையாளர் தீர்மானிக்கப்படுவதாக தொடர் அமைந்திருந்தது.[3]
2021 உலக சதுரங்க வாகையாளர் மாக்னசு கார்ல்சன் தனது பட்டத்தைக் காக்க மறுத்ததால், திங் லிரென் 2023 உலக வாகைப் போட்டியில் இயான் நிப்போம்னிசியைத் தோற்கடித்து வென்றார். உலக வாகையாளருக்காக திங்குக்கு எதிராக விளையாடும் உரிமையை வெல்வதற்காக ஏப்ரல் 2024 இல் நடைபெற்ற எட்டு வீரர்கள் கொண்ட வேட்பாளர் போட்டியில் குகேசு வெற்றி பெற்றார். 2024 வாகைப் போட்டி தொடங்குவதற்கு முன், குகேசு பிடே தரவரிசையில் 2783 எலோ மதிப்பீட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், திங் 2728 எலோ மதிப்பீட்டில் 23-வது இடத்தைப் பிடித்தார்.
14 ஆட்டங்களில் திங் இரண்டு ஆட்டங்களைலும், குகேசு மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். 14-ஆவது இறுதி ஆட்டத்தில் திங் இழைத்த பெருந்தவறினால், திங் ஆட்டத்தைக் கைவிட, குகேசு தனது வெற்றியை எளிதாக்கினார்.[4] இந்த வெற்றியின் மூலம் குகேசு உலகின் இளைய உலக வாகையாளரானார்.
Remove ads
அறைகூவல் வீரரைத் தேர்ந்தெடுக்கும் சுற்று
திங் லிரெனுடன் விளையாடும் அறைகூவல் போட்டியாளராக குகேஷ் தொம்மராஜு, கனடா, தொராண்டோவில் 2024 ஆம் ஆண்டிற்கான தகுதிகாண் சுற்றில் வென்றதன் மூலம் தகுதி பெற்றார். எட்டு வீரர்கள் இச்சுற்றில் போட்டியிட்டனர்.[5][6] இது 2024 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 22 வரை நடைபெற்றது.[7][8]
மூலம்: [9]
Remove ads
அட்டவணை
ஆட்டங்கள் அனைத்தும் உள்ளூர் நேரம் 17:00 (சிங்கப்பூர் நேரம்) மணிக்கு (14:30 இந்திய நேரம், 09:00 ஒசநே தொடங்கின.[10]
தொடக்க விழாவில் நடத்தப்பட்ட குலுக்கலை அடுத்து, குகேசு முதல் ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடத் தீர்மானிக்கப்பட்டது.[11]
ஆட்டம் 14 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தால், நிறைவு விழா முன்நோக்கி நகர்த்தப்படலாம்.[10][12]
Remove ads
முடிவுகள்
மரபார்ந்த ஆட்டங்கள்
ஆட்டம் 1: குகேசு–திங், 0–1
குகேசு–திங், ஆட்டம் 1
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
21...Qd3 இற்குப் பின்னரான நிலை.[13]
2024 நவம்பர் 25 இல் சுற்றின் முதல் ஆட்டத்தில் டிங் 42-நகர்த்தல்கள் மூலம் வெற்றி பெற்றார். திங் போர்த்திறன் கொண்ட பிரெஞ்சு தற்காப்பு ஆட்டத்தை விளையாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார், இது உயர் மட்டத்தில் ஒரு அசாதாரண தொடக்கமாகும், ஆனால் இதனை அவர் கடைசியாக உலக சதுரங்க வாகை 2023, 7வது ஆட்டத்தில் இயான் நிப்போம்னிசிக்கு எதிராக விளையாடினார்.[14]
ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், திங், "நிச்சயமாக நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்-நான் நீண்ட காலமாக ஒரு மரபார்ந்த ஆட்டத்தைக்கூட வெல்லவில்லை, என்னால் அதைச் செய்ய முடிந்தது!" என்று கூறினார். மறுபுறம் குகேஷ், "இது ஒரு தந்திரோபாயக் கவனக்குறைவு. இது ஒரு நீண்ட போட்டி, மேலும் எனது எதிராளியின் திறமை பற்றி, நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களிடையே ஒரு நீண்ட சுற்றுப் போட்டி உள்ளது, எனவே இது இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது!" என்று கூறினார்.[13]
ஆட்டம் 2: திங்–குகேசு, ½–½
திங்–குகேசு, ஆட்டம் 2
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
10.dxc4 இற்குப் பின்னரான நிலை.[15]
2024 நவம்பர் 26 இல் நடைபெற்ற தொடரின் இரண்டாவது ஆட்டம், 23 நகர்வுகளில் சமநிலையில் நிறைவடைந்தது. திங் மரபார்ந்த Giuoco Pianissimo ஆட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, 1.e4 ஐத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் வர்ணனையாளர் டேவிட் ஹோவெல். "கடந்த சில மாதங்கள் வரை திங் அரசரின் சிப்பாய்த் திறப்புகளை அரிதாகவே பயன்படுத்தினார்!"[16] திங் குகேசுக்கு சிக்கலான ஆட்டத்தை வழங்கினார். 10.dxc4, 10...Bb4!?. ஒரு சமநிலையான நிலையில், திங்குக்கு 20.h4 உடன் விளையாட ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது. திங் அதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் நகர்த்தல்களைத் தேர்ந்தெடுத்தார், இதன் விளைவாக சமநிலை ஏற்பட்டது.[15][17]
ஆட்டம் 3: குகேசு–திங், 1–0
குகேசு–திங், ஆட்டம் 3
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
18.Bg3 இற்குப் பின்னரான நிலை
2024 நவம்பர் 27 இல் 37-நகர்வுகளாக நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில் குகேசு வெற்றி பெற்றார்.[18]
ஆட்டம் 4: திங்–குகேசு, ½–½
திங்–குகேசு, ஆட்டம் 4
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
15...b6 இற்குப் பின்னரான நிலை[19]
2024 நவம்பர் 29 இல் நடைபெற்ற சுற்றின் நான்காவது ஆட்டம், 42 நகர்வுகளில் வெற்றி-தோல்வியின்றி முடிவுற்றது. திங் 1.Nf3 இல் தொடங்கி ஒரு வழக்கத்திற்கு மாறான அமைப்பில் விளையாடினார், இது இராணியின் இந்தியப் பாதுகாப்பைப் போன்றது, இந்தத் தொடக்கம் குகேசை ஆச்சரியப்படுத்தியது, ஆனால் குறிப்பாக அவர் சண்டையிடவில்லை. ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், திங் "பாதுகாப்பாக விளையாட" விரும்புவதாகவும், ஆனால் அவர் 11.b4 உடன் சில இக்கட்டுகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். குகேசின் 13...நெ5!? நகர்வு மூலம் திங்கை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், ஏனெனில் குதிரையை f4 மூலம் எளிதாக வெளியேற்ற முடிந்திருக்கும், "[f4] நீண்ட காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு நகர்வு போல் தெரிகிறது". குகேசின் 15...b6 16.Ba6 நகர்வுடன் வெற்றி பெற திங்கின் கடைசி வாய்ப்பாகும், ஆனால் அவர் 16.Nf3 விளையாடிய பிறகு, ஆட்டம் சமனை நோக்கி நகர்ந்தது. முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தாலும், குகேசு தொடர்ந்து விளையாடினார். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, இருவரும் மீண்டும் மூன்று முறை சமநிலையை அடைந்தனர்.[19]
ஆட்டம் 5: குகேசு–திங், ½–½
குகேசு–திங், ஆட்டம் 5
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
22...Bxe5 இற்குப் பின்னரான நிலை.
2024 நவம்பர் 30 இல் நடைபெற்ற சுற்றின் ஐந்தாவது ஆட்டம் 40 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இச்சுற்றில் இரண்டாவது முறையாக, திங் ஒரு பிரெஞ்சுத் தற்காப்பு ஆட்டத்தை விளையாடினார். இருப்பினும், இந்த நேரத்தில், குகேசு d5 இல் சிப்பாய்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பதிலளித்தார், ராணிகளையும் ஒரு சோடி கோட்டைகளையும் விரைவாகப் பரிமாறிக் கொண்டார். திங்கின் 15...Nh5 நகர்விற்குப் பிறகு, குகேசை 17.g4 ஐ விளையாடத் தூண்டியது. ஒரு முற்றுகையை வழங்கிய பிறகு, கிராண்ட்மாசுடர் ஜூடிட் போல்கர் இது மிகவும் ஆபத்தானது என்று நம்பினார். ஆயினும்கூட, குகேசு விரைவாக 23.dxe5 ஐ விளையாடும் வரை, ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்றதாகத் தோன்றியது. மேலும் 29...Bc6 இற்குப் பிறகு சமநிலைக்கு ஒப்புக்கொண்டனர்.[20][21]
ஆட்டம் 6: திங்–குகேசு, ½–½
திங்–குகேசு, ஆட்டம் 6
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
33...Qf3 இற்குப் பின்னரான நிலை.
2024 திசம்பர் 1 இல் நடைபெற்ற சுற்றின் ஆறாவது ஆட்டம் 46 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.[22]
ஆட்டம் 7: குகேசு–திங், ½–½
குகேசு–திங், ஆட்டம் 7
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
43...Ne4 நகர்விற்குப் பின்னரான நிலை.[23]
2024 திசம்பர் 3 இல் நடைபெற்ற சுற்றின் ஏழாவது ஆட்டம் 72 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இருவரும் பரபரப்பாக விளையாடினர். ஒரு நியோ-குரூன்ஃபெல்டு தற்காப்பில் இருந்து, குகேசு புதிய நகர்வு 7. Re1 ஐ விளையாடினார், இது இந்தத் தற்காப்புக் கோட்பாட்டிற்கு முற்றிலும் புதிய நகர்வை அறிமுகப்படுத்தியது. திங் 9...c5?! நகர்வில் மோசமாகப் பதிலளித்தார், குகேசு வலுவான நிலையில், குறிப்பிடத்தக்க நேர நன்மையையும் கொண்டிருந்தார். கடுமையான அழுத்தத்தின் கீழ், திங் Qa6-xa2 மூலம் இராணி தடூகத்திற்குச் சென்றார். இந்த நகர்வை கிராண்டுமாசுடர் அனிஷ் கிரி "ஒரு வீரரின் விரக்தி" என மதிப்பிட்டார். திங் தான் தோற்கிறார் என்பதை அறிந்திருந்தாலும், தோற்கும் முன் குறைந்தபட்சம் சிலவற்றைப் பெற விரும்புகிறார், எனக் குறிப்பிட்டார். குகேசு தெளிவாக வெற்றி நிலையில் இருந்தாலும், திங்கின் சுறுசுறுப்பான ராணி மூலம் பிரச்சனைகளை ஏற்படுத்தினார், 30. Qf4?! நகர்விற்குப் பிறகு, திங்கால் விளையாட்டை மோசமான-ஆனால்-தாக்கக்கூடிய இறுதி ஆட்டத்திற்கு வழிநடத்த முடிந்தது. வலுவான தற்காப்பு நகர்வுக்கு பிறகு 34...என்ஜி6! திங் அந்த இடத்தைக் காப்பாற்றுவார் என்று தோன்றியது, ஆனால் திங் 40...Ke5? நகர்வை விளையாடி, மீண்டும் குகேசுக்கு வெற்றி நிலையைக் கொடுத்தார், ஆனாலும் வெற்றி பெற கடினமாக இருந்தது. குகேசின் 45. h4?! நகர்வு துல்லியமற்றதாக இருந்தது, 46...f4 ஐத் தொடர்ந்து, திங் அந்த இடத்தை சமன் செய்திருந்தார். குகேசுக்கு மேலும் நடைமுறை வெற்றி வாய்ப்புகள் இருந்த போதிலும், திங் வெற்றிகரமாக அவற்றை சமன் செய்தார்.[23]
பல வர்ணனையாளர்கள் இந்த விளையாட்டைப் பாராட்டினர், பலர் போட்டியின் சிறந்த ஆட்டம் என்று அழைத்தனர்.[24][25][26]
ஆட்டம் 8: திங்–குகேசு, ½–½
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2024 திசம்பர் 4 இல் நடைபெற்ற சுற்றின் எட்டாவது ஆட்டம் 51 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
ஆட்டம் 9: குகேசு–திங், ½–½
குகேசு–திங், ஆட்டம் 9
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
20.Qb5?! நகர்விற்குப் பின்னரான நிலை
2024 திசம்பர் 5 இல் நடைபெற்ற சுற்றின் ஒன்பதாவது ஆட்டம் 54 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. ஆட்டம் 3 ஐப் போலவே, குகேசு 1.d4 நகர்வுடன் ஆட்டத்தைத் தொடங்கினார். திங்கும் ஆட்டம் 3 ஐப் போல 1...Nf6 என நகர்த்தினார். அதன் பின்னர், குகேசு மிகவும் பிரபலமான 2.c4 ஐ விளையாடினார். 2...e6, 3.g3 நகர்வுகளின் பின்னர் ஆட்டம் காட்டலான் திறப்பு நோக்கி நகர்ந்தது. திங் 3...Bb4+, 4...Be7 உடன் போகோ - இந்தியத் தற்காப்பு போன்ற ஒரு நகர்வைத் தேர்ந்தெடுத்தார், 7...c6, 8...Nbd7 நகர்வுகளுடன் மூடிய கேட்டலான் கட்டமைப்பைப் பயன்படுத்தினார். குகேசு 20.Qb5 வரை ஒரு சிறிய பயன்தரு நிலையைப் பேணினார். இது திங்கை சமன் செய்யவும், காய்களை பரிமாற்றம் செய்யவும் அனுமதித்தது.[29]
ஆட்டம் 10: திங்–குகேசு, ½–½
திங்–குகேசு, ஆட்டம் 10
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
13...Bxf6 நகர்விற்குப் பின்னரான நிலை.
2024 திசம்பர் 7 இல் நடைபெற்ற சுற்றின் பத்தாவது ஆட்டம் 36 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
ஆட்டம் 11: குகேசு–திங், 1–0
குகேசு–திங், ஆட்டம் 11
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
21. Na3 நகர்விற்குப் பின்னரான நிலை.
2024 திசம்பர் 8 இல் நடைபெற்ற 11-ஆவது ஆட்டம், 29-ஆவது நகர்வில், குகேசின் வெற்றியுடன் நிறைவுற்றது. குகேசு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்துக் குழப்பிக் கொண்டார், ஆனால் திங் தனது வாய்ப்புகளைக் குறைத்து மதிப்பிட்டு, அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். மிகவும் சிக்கலான ஆட்டத்தில் இரு வீரர்களும் பல தவறுகளைச் செய்தனர். திங் தனது குதிரையை 28...Qc8?? உடன் தவறுதலாக நகர்த்திய போது, அந்த நிலை இன்னும் சிக்கலானதாக வந்து ஆட்டத்தைத் திடீரென முடித்தது.[30]
ஆட்டம் 12: திங்–குகேசு, 1–0
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2024 திசம்பர் 9 இல் நடைபெற்ற 12-ஆவது ஆட்டம், 39-ஆவது நகர்வில், திங்கின் வெற்றியுடன் நிறைவுற்றது. அவரது சிறந்த விளையாட்டுகளில் ஒன்றில், திங் தனது எதிரியை "உருட்ட" (ஹிகாரு நகமுரா) கணினி போன்ற துல்லியத்துடன் விளையாடினார்.[31] 14-ஆம் நகர்வில், திங் ஒரு சிறிய பயன்தரு நிலையைக்கொண்டிருந்தார். குகேசு சில தயக்கமான நகர்வுகளை செய்தார்.[31] – இதனால் திங்கின் நிலைமை மேலோங்கியது.
ஆட்டம் 13: குகேசு–திங், ½–½
குகேசு–திங், ஆட்டம் 13
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
22.Bf4 நகர்விற்குப் பின்னரான நிலை.
2024 திசம்பர் 11 இல் நடைபெற்ற 13-ஆவது ஆட்டம் 69 நகர்வுகளின் பின்னர் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. குகேசு திங்கை 7.a3, 8.Be3 நகவுகளின் தொடக்கத்திலேயே வியப்பிலாழ்த்தி, திங்கை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். 17.Qf3 நகர்வுடன்[33] குகேசு d4-சிப்பாயை வழங்கினார், ஆனால் திங் தனது எதிராளியை நம்பி 17...Qe8 நகர்த்தினார். பலவீனமான d6-, c7-சதுரங்களில் ஊடுருவி, 22.Bf4! நகர்வின் மூலம் குகேசு தனது மேநிலையை வளர்த்துக் கொண்டார், ஆனால் 25.Bxe7?! நகர்வு அவசரமாக இருந்தது. இந்த நடவடிக்கை சாதகமான நிலையை ஏற்படுத்தினாலும், 25.Re1 நகர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இன்னும் 10 நகர்வுகளுக்கு 8 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோதிலும், திங் விளையாட்டை சமன் செய்ய 31...Rf8, 32...Rc7 ஆகிய ஒரே நகர்வுகளை விளையாட வேண்டி இருந்தது[34]
ஆட்டம் 14: திங்–குகேசு, 0–1
திங்–குகேசு, ஆட்டம் 14
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
திங்கின் பெருந்தவறை 55.Rf2?? அடுத்த நிலை
திசம்பர் 14 இல் நடைபெற்ற 14-ஆவது ஆட்டத்தில் 58 நகர்வுகளில் குகேசு வெற்றிபெற்றார். இந்தக் கடைசி ஆட்டத்தில் நுழையும் போது இருவரது புள்ளிகளும் 6½–6½ என சமநிலையில் இருந்ததால், எந்த ஒரு வீரருக்கும் வெற்றி என்பது போட்டியை வெல்வதை அர்த்தப்படுத்தியிருக்கும்; ஒரு சமநிலையானது அடுத்த நாளில் விளையாடப்படும் சமன்-முறி ஆட்டங்களின் தொடருக்கு வழிவகுத்திருக்கும். திங் ஒரு ஆச்சரியமான பெருந்தவறை செய்வதற்கு முன், ஒரு நிலையான இறுதியை நோக்கி மந்தமான சமநிலையில் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது, அந்த நேரத்தில் திங் ஒரு கோட்டை பரிமாற்றத்தை (55.Rf2??) வழங்கினார், அந்த நேரத்தில் அவரது அமைச்சர் ஒரு மூலையில் சதுக்கத்தில் சிக்கிக்கொண்டார், குகேசைக் கட்டாயமாகக் கலைக்க அனுமதித்தார். இறுதியில் (2 சிப்பாய்கள் எதிராக 1 சிப்பாய்) குகேசு வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் குகேசு இளைய மறுக்க-முடியாத உலக சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக 2002 உலக சதுரங்க வாகையை வென்ற உருசுலான் பனோமரியோவ் (உக்ரைன்) மட்டுமே, உலக சதுரங்க வாகை பிரிக்கப்பட்டபோது நடத்தப்பட்ட knock-out பாணிப் போட்டி, இளைய உலக வாகையாளராக இருந்தார்.[35]
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
