உஸ்தா முகமது மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உஸ்தா முகமது (Usta Muhammad District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான்மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் உஸ்தா முகமது நகரம் ஆகும். உஸ்தாத் முகமது நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கே 245 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 782 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜாப்ராபாத் மாவட்டத்தின் இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் செப்டம்பர் 2022ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]
Remove ads
மாவட்ட எல்லைகள்

உஸ்தா முகமது மாவட்டத்திற்கு வடக்கில் ஜாப்ராபாத் மாவட்டம், கிழக்கில் சிந்து மாகாணம், தெற்கிலும், தென்மேற்கிலும் ஜால் மாக்சி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
உஸ்தா முகமது மாவட்டம் 2 வருவாய் வட்டங்களையும், 20 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உஸ்தா முகமது மாவட்டத்தின் மக்கள் தொகை 2,92,060 ஆகும்.[6].
மொழிகள்
இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 40.18%, சிந்தி மொழியை 24.71%, சராய்கி மொழியை 19.05%,பிராகுயி மொழியை 19.05% பேரும் பேசுகின்றனர்.
சமயங்கள்
இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 97.30% பேரும், இந்து & கிறித்தவ போன்ற சமயங்களை 2.70% பேரும் பின்பற்றுகின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads