ஜாப்ராபாத் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாப்ராபாத் மாவட்டம் (Jafarabad District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தேரா அல்லா யார் நகரம் ஆகும்.[2] தேரா அல்லா யார் நகரம், மாகாணாத் தலைநகரான குவெட்டாவிற்கு 355 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு 234 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 1987ஆம் ஆண்டில் நசீராபாத் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு ஜாப்ராபாத் மாவட்டம் நிறுவப்பட்டது.

Remove ads
மாவட்ட எல்லைகள்
ஜாப்ராபாத் மாவட்டத்திற்கு வடக்கே , கிழக்கே சிந்து மாகாணம், தெற்கே உஸ்தா முகமது மாவட்டம் மற்றும் மேற்கே நசீராபாத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
ஜாப்ராபாத் மாவட்டம் இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 81,562 குடியிருப்புகள் கொண்ட ஜாப்ராபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 5,94,558 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.79 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 35.53% ஆகும். இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 224,911 (37.83%) ஆகும். நகர்புறங்களில் 1,63,393 (27.48%) மக்கள் வாழ்கின்றனர்.[6]
சமயங்கள்
இம்மாவட்டத்தில் 98.03% மக்கள் இசுலாம் சமயத்தையும், 1.84% மக்கள் இந்து சமயத்தையும் மற்றும் பிற சமயங்களை 0.43% பேர் பின்பற்றுகின்றனர்.
மொழிகள்
இம்மாவட்டத்தில் பலூச்சி மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி, சராய்கி மொழிகள் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads