ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு

From Wikipedia, the free encyclopedia

ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு
Remove ads

ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of Ibero-American States, Portuguese: ஆர்கனைசேசோ டோசு எசுடடோசு ஐபீரோ-அமெரிக்கனோசு, எசுப்பானியம்: ஆர்கனைசேசியோன் டி எசுடடோசு ஐபீரோயமெரிக்கனோசு, வழமையானச் சுருக்கம் OEI) போர்த்த்க்கேயம்- எசுப்பானியம்-பேசும் அமெரிக்காக்கள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் எக்குவடோரியல் கினி நாடுகளின் பன்னாட்டு அமைப்பாகும். இது முன்னதாக கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டிற்கான ஐபீரோ-அமெரிக்க நாடுகளின் அமைப்பு என அழைக்கப்பட்டு வந்தது. கல்வி, அறிவியல், தொழினுட்பம், கலை ஆகிய துறைகளில் பிராந்திய திட்டப்பணிகளை திட்டமிடவும் மேம்படுத்தவும் இந்நாட்டு அரசுகளிடையே கூட்டுறவை வளர்ப்பது இதன் நோக்கமாகும். இந்த அமைப்பின் உறுப்பினர்களாக அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், கொலொம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கூபா, சிலி, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோர், எல் சால்வடோர், குவாத்தமாலா, எக்குவடோரியல் கினி, ஹொண்டுராஸ், மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பரகுவை, பெரு, போர்த்துகல், புவேர்ட்டோ ரிக்கோ, எசுப்பானியா, உருகுவை மற்றும் வெனிசுவேலா உள்ளன.[1] இந்த அமைப்பின் தலைமைச் செயலகம் மத்ரித்தில் அமைந்துள்ளது. பிராந்திய அலுவலகங்கள் அர்கெந்தீனா, பிரேசில், கொலொம்பியா, எல் சால்வடோர், எசுப்பானியா, மெக்சிக்கோ, பெரு நாடுகளில் அமைந்துள்ளன; களப்பணி அலுவலகங்கள் சிலி, ஹொண்டுராஸ், நிக்கராகுவா மற்றும் பரகுவையில் இயங்குகின்றன. இந்த அமைப்பிற்கான நிதி உறுப்பினர் நாடுகளின் கட்டாய ஒதுக்கீடுகளாலும் தன்விருப்ப கொடைகளாலும் பெறப்படுகின்றது. தனியார் பண்பாட்டு கல்வி நிறுவனங்களும் அமைப்புகளும் நன்கொடை வழங்குகின்றன. இந்த அமைப்பின் மதிப்புறு தலைவராக எசுப்பானிய மன்னர் பெலிப் உள்ளார்.

விரைவான உண்மைகள் ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, தலைமையகம் ...
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads