கண்டோலி அணைக்கட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்டோலி அணை (Khandoli Dam, இந்தி: खंडोली डैम) இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பெங்காபாத்தை நோக்கிய கிரிடி நகரத்திலிருந்து 10 கி.மீ. வடகிழக்குத் திசையில் அமைந்துள்ள அணையாகும். கண்டோலி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கண்டோலி என்பது கண்டோலி மலையின் அடிவாரத்திலுள்ள ஒரு கிராமமாகும். அணையின் நீர்த்தேக்கம் கிரிடிஹ் நகரில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நீர் வழங்கும் ஆதராமாக உள்ளது. [1] இது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். [2]

Remove ads

விளக்கம்

கண்டோலி மலையானது சேணம் போன்ற ஒரு விசித்திரமான வடிவமாக உள்து. மேலும் இது ஒரு கருங்கல் தோற்றம் ஆகும். கண்டோலி மலையின் சிகரம் ஒரு எரிமலைக் கூம்புக்கு ஒத்ததாகத் தோன்றுகிறது மற்றும் அதனுடன் பிரமாண்டமான கற்பாறைகளைக் கொண்ட ஒரு பெரிய சேணம் உள்ளது. [3] அண்மையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கண்டோலி ஏரியை பல தசாப்தங்களுக்குப் பிறகு வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. [4]

வனவிலங்கு வாழ்க்கை

Thumb
பெரிய நீர்க்காகம்

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் வட ஆசியா, இமயமலைப் பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து கண்டோலி ஏரிக்கு வருகின்றன. [5] பெரிய நீர்க்காகம், சைபீரிய வாத்து, சைபீரியக் கொக்கு, சிவப்புத்தாரா, பட்டைத்தலை வாத்து, காட்டு வாத்து மற்றும் பல இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக அணையில் இடம் பெயர்கின்றன. பறவைகளின் இடம்பெயர்வு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து வெப்பமான காலநிலைக்குத் தொடங்கி மார்ச் மாதத்தில் திரும்பும். கண்டோலிக்கு நாற்பது வெவ்வேறு வகையான பறவைகள் வருகின்றன, ஆனால் அவற்றின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக முக்கியமாக மாசு மற்றும் வேட்டையாடுதலால் குறைந்துள்ளது. [6] முயல், கினிப் பன்றி, மயில், ஆந்தைகள் போன்ற சில விலங்குகளும் கேளிக்கை பூங்காவில் கூண்டுகளில் வைக்கப்படுகின்றன.

Remove ads

சுற்றுலா

கண்டோலி சுற்றுலா அம்சமாக மாவட்ட சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.   இப்பகுதியில் புலம் பெயர்ந்த பறவைகள் இருப்பதால் பறவைகள் பறவை நோக்கலுக்காக குளிர்கால மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 6 ஏக்கர்கள் (2.4 எக்டேர்கள்) அளவிலான ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஏரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது, இது பொம்மை ரயில் மற்றும் ஊசலாட்டங்களில் மகிழ்ச்சியான சவாரிகளையும் கொண்டுள்ளது. யானை மற்றும் ஒட்டக சவாரிகள் மற்றும் பிற எண்ணற்ற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒரு சிற்றுண்டியும் உள்ளது. ஒரு கண்காணிப்பு கோபுரமும் 600 அடி உயரமுள்ள மலையும் கண்டோலி தளத்தின் பரந்த காட்சியை வழங்குகிறது.

சாகச விளையாட்டு

காண்டோலி வான்வழி சாகச விளையாட்டுகள், மலையேறுதல் மற்றும் நீர் தொடர்பான சாகச விளையாட்டுகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும். [7] வான்வழி சாகச நடவடிக்கைகளில் சூடான காற்று பலூனிங், பாராகிளைடிங் மற்றும் நிலம் மற்றும் நீர் இரண்டிலிருந்தும் பாராசெயிலிங் ஆகியவை அடங்கும். கண்டோலி மலையானது பெரும் அளவிலான, வெவ்வேறு வடிவங்களைக் கொண்ட கருங்கல் பாறைகளைக் கொண்டுள்ளது. இது மலையேற்றம் செய்பவர்களுக்கு பல்வேறு வகையிலான சவால்களைக் கொண்டுள்ளது. மலையுச்சி முகடுகளுக்கு இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஏறுதல், மலைகளுக்கிடையே கடத்தல் போன்ற சவாலான சாகசங்களைச் செய்கின்றனர். கண்டோலி அணைக்கட்டில் உள்ள கண்டோலி ஏரி காலால் மிதித்து இயக்கக்கூடிய படகு சவாரி, மோட்டார் படகு சவாரி, இசுகூபா மூழ்கல், சறுக்குப்படகு சவாரி, சிறுபடகு சவாரி]], காயாகிங் மற்றும் அலைச்சறுக்கு போன்ற நீர் சாகச விளையாட்டுகளுக்கப் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads