கந்தாரிய மகாதேவர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தாரிய மகாதேவர் கோயில் (Kandariya Mahadeva Temple) (சமசுகிருதம்: कंदारिया महादेव मंदिर), என்பதற்கு மேன்மைமிகு கடவுளின் குகை எனப் பொருளாகும். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜுராஹோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பெரிய இந்துக் கோயிலாகும்.
Remove ads
அமைவிடம்

கந்தாரியா மகாதேவர் கோயில், மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ கிராமத்தில் அமைந்துள்ள நினைவுச் சின்னக் கோயில்களில் மிகப்பெரியதாகும். [1] [2] கந்தாரியா மகாதேவர் கோயில் கஜுராஹோவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்துக் கோயில்களின் தொகுப்பில் உள்ளது.[3][4]
Remove ads
போக்குவரத்து
மகோபாவிற்கு தெற்கில் 34 கி மீ தொலைவிலும், சத்தர்பூருக்கு கிழக்கில் 34 கி மீ தொலைவிலும், பன்னாவிலிருந்து 27 கி மீ தொலைவிலும், ஜான்சி நகரத்திலிருந்து வடக்கே 175 கி மீ தொலைவிலும், தில்லியிலிருந்து தென்கிழக்கே 600 கி மீ தொலைவிலும் உள்ளது. கஜுராஹோ தொடருந்து நிலையத்திலிருந்து 9 கி மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. [1][5] கஜுராஹோ வானூர்தி நிலையத்திலிருந்து தில்லி, ஆக்ரா மற்றும் மும்பை நகரங்களுக்கு வானூர்திகள் இயக்கப்படுகிறது.[5][6]
Remove ads
வரலாறு
வட இந்தியாவின் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் குறுநில மன்னர்களான சந்தேல அரசர்களின் ஆட்சி இப்பகுதியில், கி. பி. 500 முதல் கி.பி. 1300 வரை நீடித்தது. சந்தேலர்களின் ஆட்சியின் உச்சக்கட்டத்தின்போது கஜுராஹோ கோவில்கள் 950 ஆம் ஆண்டு முதல் 1150 ஆம் ஆண்டு வரையிலான 200 ஆண்டு காலவரையறையில் கட்டப்பட்டதாகும். அவைகளில் சிறப்பானவைகள் கந்தாரியா மகாதேவர் கோயில், இலக்குமணன் கோயில், கலிஞ்சர் கோட்டை மற்றும் சமணத் தீர்த்தங்கரர்களின் கோயில்கள் ஆகும்.[7] கஜுராஹோ வரலாறு கால வெள்ளத்தில் மறைக்கப்பட்ட இக்கோயிலை ஒரு பிரித்தானியர் 19 ஆம் நூற்றாண்டில் வெளி உலகிற்கு கொண்டுவந்தார்.
சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் (1003-1035) கந்தாரியா மகாதேவர் கோயில் கட்டப்பட்டதாகும். [8] 1986-இல் கந்தாரியா மகாதேவர் கோயிலை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது.[9][10]
சிறப்புகள்


கஜுராஹோவின் மேற்கு பகுதி நினைவுச் சின்னத் தொகுப்பில் உள்ள கோயில்களில் மிகப்பெரியதாகும்.[11] கஜுராஹோவின் மேற்கு தொகுப்பில் கந்தாரியா மகாதேவர் கோயில், மதங்கேஷ்வரர் கோயில் மற்றும் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.
பஞ்சயாதன முறைப்படி கட்டப்பட்ட மகாதேவர் கோயிலின் மூலவர் கர்ப்பகிரக மேடை 4 மீட்டர் உயரத்தில் உள்ளது.[12] [13] மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்ட இக்கோயிலின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோயில் கோபுரம் 84 சுருள் வடிவிலான விமானங்கள் கொண்டது. [4] கந்தாரியா மகாதேவர் கோயில் 102 அடி நீளமும், 67 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது.[2][13][14]
இக்கோயில் குகை போன்று உள்ளதால், சூரிய ஒளி கோயிலில் புகுவதற்கு ஏற்ப, கோயில் சுவர்களில் சாளரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் வலது நுழைவாயிலில் ஒரே கல்லால் ஆன சிற்பங்களுடன் கூடிய தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது.[4]


கோயிலில் உள்ள மூன்று மண்டபங்களில் சிவன், பார்வதி சன்னதிகளும், கருவறை மண்டபத்தில் சிவலிங்கமும் உள்ளது. இக்கோயிலில் சப்தகன்னியர், விநாயகர் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களும் உள்ளது. [4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads