கயத்தாறு

From Wikipedia, the free encyclopedia

கயத்தாறுmap
Remove ads

கயத்தாறு (Kayatharu), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கயத்தாறு பேரூராட்சியில், வீரபாண்டிய கட்டபொம்மன் துக்கிலிடப்பட்ட இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இதன் அருகமைந்த நகரங்கள், வடக்கில் கோவில்பட்டி 30 கி.மீ. தொலைவிலும், தெற்கில் திருநெல்வேலி 30 கி.மீ தொலைவிலும், கிழக்கில் தூத்துக்குடி 55 கி.மீ தொலைவிலும். அமைந்துள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கி.மீ தொலைவில் உள்ள குரும்பூர் ஆகும்.

விரைவான உண்மைகள்

கயத்தாறு 6.23 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 10,400 ஆகும்.[5] கயத்தாறு நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

வரலாற்று நிகழ்வுகள்

Thumb
கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூண்

பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 16 , 1799, அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16, 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சிலை நிறுவப்பட்டு, நீ. சஞ்சீவ ரெட்டி விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் கு. காமராசரால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும், உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது.

Remove ads

சந்தை

இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் காய் கறிகள், தானியங்கள், கனி வகைகள், மற்றும் இறைச்சி வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் பசுமாடுகள், ஆடு, கோழிகள், என மிருகங்கள் சார்ந்தவை மற்ற பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. இந்த சந்தைக்கு, பக்கத்தில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் வருகை தருகின்றனர்.

Remove ads

குட்டி குளம்

இங்கு மழைக் காலங்களில் மழை நீர் இந்த நீர் நிலையில் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்காகவும் மற்றும் மேச்சல் கால் நடைகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றது.

தொழில்கள்

இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய தொழிற்சாலையும், இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் காற்றாலையும் உள்ளது. இதையேற்று மத்திய அரசின் ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னாள் இந்தியப் பிரதமர், அடல் பிகாரி வாச்பாய் திறந்து வைத்தார்.[சான்று தேவை]

கோயில்கள்

இந்துக் கோயில்கள்

  1. அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் கோயில்.
  2. திருமலை நாயகி - திருநீலகண்டேஸ்வர் கோயில். இவைகள் மன்னர்கள் ஆட்சி காலகட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவை.
  3. கயத்தாறு ஆத்தங்கரை சுடலை மாடன் சாமி கோயில். இந்த கோவிலின் கொடைத் திருவிழா வருடா வருடம் ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெறுகின்றது.
  4. அருள்மிகு ஸ்ரீ நல்ல அய்யனார் கோவில் - 133 கிராம சேனைத்தலைவர்க்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
  5. அருள்மிகு காந்தாரி அம்மன் திருக்கோவில் - ஊர் பொதுக்கோவில், கயத்தாறு ஊரின் நடுவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அனைத்து இனத்தை சேர்ந்த மக்களாலும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கிறித்தவத் தேவாலயங்கள்

  1. புனித லூர்த் மாதா தேவாலயம். இது ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.
  2. தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.

பள்ளிவாசல்

இந்த ஊரில் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஒன்று உள்ளது, இது இந்த நகரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads