தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 45 அல்லது மாபெரும் தெற்கு வழித்தடம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். சென்னையின் தென்மேற்கு பகுதியில் கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் போன்ற நகரங்கள் வழியாக தேனியில் முடிகிறது.[1] மொத்தத்தில் சென்னை முதல் தேனி வரை 501 கி.மீ. நீளம் ஆகும். சென்னை முதல் திண்டுக்கல் வரை நான்குவழிச் சாலை வசதி உள்ளது. திண்டுக்கல் முதல் தேனி வரை நான்குவழிச் சாலை பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் வரை தென்னக இரயில்வே சார்பில் தொடர்வண்டிப் பாதையும் இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

பெரம்பலூர் நகர் பகுதி முழுவதும் 6 வழிச்சாலை வசதி சிறப்பாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இந்த சாலைக்கு நடுவே பூங்கன்றுகள் பராமரிப்புகளுடன் பார்க்க அழகாக அமைந்துள்ளது.தமிழகத்தில் விபத்து/இறப்பு விகிதம் மிகையான பகுதி இந்த பெரம்பலூர்.

Remove ads

குறிப்பு

Remove ads

மேற்கோள்கள்

கூடுதல் பார்வைக்கு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads