கராபுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராபுக் மாகாணம் (Karabük Province, துருக்கியம்: Karabük ili ) என்பது அனத்தோலியாவின் வடக்கு பகுதியில் (வடக்கு மத்திய துருக்கி ) அமைந்துள்ள ஒரு மாகாணமாகும். இது அங்காராவுக்கு வடக்கே சுமார் 200 கி.மீ. (124 மைல்) தொலைவிலும், சோங்குல்டக்கிலிருந்து 115 கி.மீ. (71 மைல்) தொலைவிலும், கஸ்தமோனுவிலிருந்து 113 கி.மீ. (70 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. 2010 இல் இது 227,610 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மாகாணத்தின் முக்கிய நகரம் கராபக் ஆகும், இது கருங்கடல் கடற்கரைக்கு தெற்கே 100 கி.மீ. (62 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
கராபக் மாகாணம் துருக்கியின் புதிய மாகாணங்களில் ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டு வரை இது சோங்குல்டக் மாவட்டமாக இருந்தது. பின்னர் இதன் பெயரிலேயே ஒரு மாகாணம் உருவாக்கபட்டது. 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது கராபக், எஃப்லானி, சஃப்ரான்போலு மற்றும் யெனிஸ் மாவட்டங்களை உள்ளடக்கியது, அவை முன்னர் கான்கியர் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
கராபக்கானது பார்ட்டனுக்கும் அங்காராவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது பண்டைய காலங்களில் அமஸ்ரா கடற்கரை மற்றும் மத்திய அனத்தோலியாவுக்கு இடையேயான ஒரு முக்கியமான பாதையாக இருந்தது. அங்காரா மற்றும் சோங்குல்டக்கிற்கு இடையிலான தொடருந்து கராபக் வழியாக செல்கிறது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய களம் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான சஃப்ரன்போலு கராபக் மாகாணத்தில் அமைந்துள்ளது.
Remove ads
மாவட்டங்கள்
கராபக் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- எஃப்லானி
- எஸ்கிபஜார்
- கராபக்
- ஓவாசக்
- சஃப்ரன்போலு
- யெனிஸ்
வரலாறு
கராபக் என்ற பெயரானது அதன் புவியியலியலில் இருந்து உருவானது. காரா, என்பது ஆங்கிலத்தில் கருப்பு, என்றும் பக் (Bük) என்பது ஆங்கிலத்தில் புதர்ச்செடி என்று பொருள்தரக்கூடியது இவற்றின் சேர்க்கையாக இதன் பெயர் ஏற்பட்டது.
வரலாற்று காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பல புதைமேடுகள் மற்றும் மலை நகரங்கள் இப்பகுதியில் இருந்தும், அறிவியல் பகுப்பாய்வு இல்லாததால், போதுமான தகவல்கள் பெறப்படவில்லை.
காட்சியகம்
- சஃப்ரான்போலுவின் பாரம்பரிய வீடுகள்
- சஃப்ரான்போலுவில் வரலாற்று காலணி தயாரிக்கும் கடைகள்
- எஃப்லானியில் உள்ள போஸ்டான்சி குளம்
- எஃப்லானி கிராமப்புறம்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads