காஞ்சிரப்பள்ளி
கேரளாவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிரப்பள்ளி (Kanjirappally) தென்னிந்திய மாநிலமான கேரளா மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.[1] இது மாவட்டத் தலைநகரிலிருந்து சுமார் 38 கி.மீ. (24 மைல்) தூரத்திலுள்ளது.

Remove ads
பெயர்க் காரணம்
காஞ்சிரப்பள்ளி என்ற பெயர் இந்த இடங்களில் அதிகமாகக் காணப்படும் எட்டி (மலையாளம்: காஞ்சிர மரம்) மரத்திலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது.[1]
காலநிலை
கேரளாவின் அதிக மழைப்பொழியும் பகுதியாக இந்நகரம் உள்ளது. மேலும் கோடைக்காலத்திலும் அதிக மழையை பெறுகிறது. இந்தியாவில் சமமான மழைக்காடுகள் வகை காலநிலையை அனுபவிக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். சராசரி ஆண்டு மழை 4156 மிமீ ஆக இருக்கிறது.[2]
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை (பழைய தே.நெ.எண் 220 கொல்லம் - தேனி இப்போது 83 ) காஞ்சிராப்பள்ளியை முக்கிய அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கிறது. கோட்டயம் - குமுளி சாலை காஞ்சிராப்பள்ளியை முண்டக்காயம் போன்ற முக்கிய அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கிறது. கோட்டயம் ( 38 கி.மீ. ), குட்டிக்கானம் ( 34 கி.மீ.), குமுளி ( 72 கி.மீ. ), பொன்குன்னம் ( 5 கி.மீ. )
அருகிலுள்ள கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் நெடும்பாசேரியில் உள்ளது. அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் கோட்டயம், சங்கனாச்சேரியில் உள்ளது. அருகிலுள்ள கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் பொன்குன்னத்தில் உள்ளது .
சபரிகிரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
பத்தனம்திட்டா மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சபரிமலை பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவதாக எருமேலி மணிமாலையில் உள்ள ஹாரிசன் தோட்டங்களின் செருவள்ளி தோட்டத்தில் ம் ஒன்றை, கேரளாவின் 5வது பன்னாட்டு வானூர்தி நிலையமான சபரிகிரி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கட்டுமானத்தை 19 ஜூலை 2017 அன்றுஅறிவித்துள்ளது.[3]
காஞ்சிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
பிரபலங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads